Saturday, 26 November 2011

இவர்கள்-1

இவர்கள்-1

மத்திய அமைச்சர், சரத் பவாரினைக் கன்னத்தில் அறைந்ததன் எதிரொலியாக, இணையத்தின் சமூக தளங்களில் பரிமாறப்பட்ட கருத்துகள் உரையாடல்களில், பிரபல எழுத்தாளர், இரா. முருகன் அவர்கள் பதிந்திருந்த ஃபேஸ் புக் மெசேஜ் என்னை இதனை எழுதத் தூண்டியதெனச் சொல்லலாம்

காவியக் கதாபாத்திரங்களில் ஒருவரைக் கன்னத்தில் அறைய வாய்ப்புக் கிடைத்தால் கொலவெறியோடு கையை ஓங்குவது யாரை நோக்கி? எனக்கு - மகாபாரதத்தில் தருமன் என்பதாக முருகன் அவர்கள் சொல்லியிருந்தார்

பாரதம் சொல்ல விழைந்த மூலக் கருத்தின் அடையாளம் தர்மன் என்பது நான் நம்புகின்ற சிந்தனை. அதனை மறுமொழியாக்கி

Draupadi tells her husband, to give up this forest living, raise an army and fight evil kauravas for what is this rightfully thiers,
I think king of men, is time to use your authority on the greedy dhiridharashtras who are always offensive. there is no more time to ply the kurus with forgiveness: and when the time for authority has come, authority must be employed. the meek are despised, but the people shrink from the severe; he is a king who knows both
Yudhishtra respons by reminding draupadi that he has given his word. to figh, he says to her is easy; to forgive is more difficult. to be patient is not to be weak; to seek peace is always wiser course. Draupadi however wonders why her husband does not feel outrage, like kshatriya warrior, at the injustice of their situation

why does not your anger blaze ? truly O best of bharathas, you have no anger, else why is that your mind is not moved at the sight of your brothers and me ?
YUDISHTRA : FOREBEARANCE IS SUPERIOR TO ANGER
------

Let me add what the German Philosopher Immanuel Kant said : when moral worth is at issue, what counts is not actions, which one sees, but those inner principles of action that one does not see
------
பாரதம் சொல்ல வந்த சாரத்தின் மொத்த வடிவம் தர்மன் தான்.. முருகன் சார் கையைக் கெட்டியா புடிச்சுண்டு வாண்டாம் சார்னு சொல்லுவேன்.

இந்த மேற்கோள் குருசரண்தாஸ் எழுதிய The Difficulty of being good என்ற புத்தக்த்திலிருந்து

பிறகு உதித்த சிந்தனை தான் இந்த தொடர்

காப்பியக் கதாபாத்திரங்களை முன்னிறுத்தி ஒரு தொடர் பதிவு

பாரதத்திலிருந்தே தொடங்கலாம்.. அகர வரிசையில்

அபிமன்யு
அர்ஜுனன்
அஸ்வத்தாமன்
பீமன்
பீஷ்மர்
தர்மன்
த்ருஷ்டத்யும்னன்
திருதராஷ்ட்டிரன்
திரௌபதி
துரோணர்
துச்சாதனன்
துரியோதனன்
கர்ணன்
காந்தாரி
க்ருஷ்ணன்
குந்தி
நகுலன்
சகாதேவன்
சகுனி
விதுரன்

என்பதாக நான் ஒரு முதற்கட்ட பட்டியலைத் தயார் செய்தேன்.. இவற்றில் விட்டுப் போனதாகக் கருதப்படும் பெயர்களை நண்பர்களும் சொன்னார்கள்

கதாபாத்திரங்கள் வெறும் புனைவின் வடிவமல்ல என நமது கிரேக்கப் பாட்டன் அரிஸ்டாட்டில் Poetics ல் சொன்னதில் எனக்கு முழு சம்மதம் இருக்கின்றது

இந்த முதல் பட்டியலில் யாரிடமிருந்து தொடங்கலாம் என்பதில் எனக்கு தடுமாற்றமும் தீர்மானமும் கலந்து இருக்கின்றது

அதை சீக்கிரமே முடிவுக்குக் கொண்டு வந்து தொடரை தொடங்குகிறேன்

இவர்களில் யாரிலிருந்து தொடங்கலாம் என்று நீங்களும் சொல்லலாம்.. சுருக்கமாக ஒரு காரணமும் சொல்லி..

8 comments:

¸ñ½ý ÌõÀ§¸¡½õ said...

YUDISHTRA : FOREBEARANCE IS SUPERIOR TO ANGER
அதெல்லாம் சரிதான்; will limitless forbearance help a common man.? ரௌத்ரம் பழகு என்ற கவிஞ்ஞன் வாக்கு பொய்யா? மனித குலத்தின் ஆதாரமான ரஸங்களில் ஒன்றை இழப்பது சரியா?

சூதாடுவது, மனைவியை வைத்து சூதாடுவது என்ற சாதாராண மனிதர்களின் குணங்களைக் கொண்ட ஒருவர் ஞானிகளுக்கேயுரிய அதீதமான சாத்வீகத்தை அனுசரிப்பது எப்படி? இந்த முரண்பாடு விளங்கவில்லை.

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

ñ½ý ÌõÀ§¸¡½õ

தர்மன் குறித்து நான் விரிவாக எழுதும் போது உங்கள் கருத்துரைகளுக்கான பதில் எழுத வாய்ப்பு கிட்டும்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Ganpat said...

தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்;
தர்மம மறுபடி வெல்லும் எனும் இயற்கை
மர்மத்தை நம்மாலே உலகங்கறக
வழிதேடி விதியிந்த செய்கை செய்தான்.கருமத்தை மேன்மேலும் காண்போம்.இன்று கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்.தர்மத்தை அப்பொழுது வெல்லக்காண்போம் தனுவுண்டு காண்டீபம் அதன் பேரென்றான்!
எனும் மகாகவியின் சாரம்சத்தை விட மகாபாரதத்திற்கு ஒரு சுருக்கம் தேவையா என்ன?

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

எழுதவிருக்கும் தொடர் மஹாபாரதத்தின் சுருக்கமோ. அல்லது மஹாபாரதம் கதை குறித்தோ ஆன ஸ்பெசிவிக் தொடர் இல்லை.. காப்பியக் கதை மாந்தர்களின் பெர்சனாலிட்டி குறித்தது

Ganpat said...

then இந்த வரிசையில் போகலாமே!
(அடிப்படை:from least debated to most debated )
துச்சாதனன்
த்ருஷ்டத்யும்னன்
சகாதேவன்
அஸ்வத்தாமன்
நகுலன்
விதுரன்
அபிமன்யு
காந்தாரி
பீமன்
பீஷ்மர்
அர்ஜுனன்
குந்தி
துரோணர்
திருதராஷ்ட்டிரன்
சகுனி
துரியோதனன்
தர்மன்
திரௌபதி
கர்ணன்
க்ருஷ்ணன்

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

கணபதி,

நான் எனது முதல் சாய்ஸ் க்ருஷ்ணர் என தேர்வு செய்திருக்கேன்

காரணத்தினை க்ருஷ்ணரைக் குறித்த பதிவில் சொல்கிறேன்

Ganpat said...

Best wishes and looking forward to your write ups Sir!

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - திருதராஷ்டரன் - பிள்ளைப் பாசத்தினால் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்காமல் - தவறு செய்த பிள்ளைகளை தட்டிக் கேட்காமல் - அனைத்து நிகழ்வுகளையும் சகித்துக் கொண்டிருந்தானே - அவனைத்தான் முதலில் அடிக்க வேண்டும். பிறகு இராமாயணம் எனில் இராமனை அடிக்க விரும்புகிறேன். சீதா பிராட்டியினைத் தீக்குளிக்கச் சொன்னானே - அதற்காக.

தொடரினை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். கிருஷ்ணன் எனபதில் எனக்கு உடன்பாடில்லை. தொடர்க - பார்ப்போம்.

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா