Wednesday, 23 November 2011

பீஷ்மர் சொன்ன கதை ( கதை நம்பர் 2)

பீஷ்மரிடம் தர்மன் கேட்கும் சுவாரசியமான கேள்வி

”பாட்டனாரே ! நல்லொழுக்கம் கொண்ட பெண்கள் எப்படி விளங்குகிறார்கள்?”

“தர்மா இதற்கு நான் இரண்டு பெண்களுக்கிடையே நிகழ்ந்த உரையாடலைச் சொல்கிறேன்...
ஸூமனை எனும் பெண், சொர்க்கத்துக்கு அப்போது தான் வரும் சாண்டிலி எனும் பெண்ணைக்
கேட்கிறாள்


“நீ வரும் போது பார்த்தேன்.. மிகவும் ஒளியுடன் பிரகாசமாக வந்து இறங்கினாய்.. நீ
பூலோகத்திலே என்ன தவம் செய்தாய்.. என்ன மாதிரி யாகம் செய்தாய்”


“அதெல்லாம் ஒன்றும் இல்லை; நான் என் கணவனுடன் சுமூகமாக இருந்தேன். என் மாமியார்
, மாமனாருடன் நல்லுறவு வைத்திருந்தேன். என் குழந்தைகளை கோபித்ததில்லை.. என்
வீட்டில் பொருட்களை கவனமாக வைத்திருந்தேன். உணவு பொருட்களையும் தானியங்களையும்
கண்டபடி விரயம் செய்ததில்லை.. உணவு உண்ணும் போது அவை சிந்தாமல், விரயமாகாமல்
பார்த்துக் கொண்டேன்.. கணவன் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிட்டால் நான்
அலங்காரமே செய்து கொள்ள மாட்டேன்”
-----------------------------
உபரியாகக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம் ;

கணவன் ஊரில் இல்லாத போது அலங்காரம் எதற்கு என கேட்கும் பாட்டு ஒன்று விவேக
சிந்தாமணியில் இருக்கிறது தெரியுமோ


உண்ணல்பூச் சூடல் நெஞ்சுஉவத்தல் ஒப்பனை
பண்ணல்எல் லாமவர் பார்க்கவே அன்றோ
அண்ணல்தம் பிரிவினை அறிந்தும் தோழீநீ
மண்ணவர் தனைஇது மடமை ஆகுமால்


இதே மாதிரி நம்ம பாட்டி ஔவை சொன்னதும் ஒன்னு இருக்கு
நாளல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே ஆளல்லா மங்கைக்கு அழகு

ராமாயணத்திலே இப்படித்தான் இராமனைப் பிரிந்தாள் சீதை.. அசோகவனத்தில் அலங்காரமின்றியே இருந்தாள்.. அவளைக் கண்ட அனுமன் இதை இராமனிட்த்திலே சொல்லியும் இருக்கான்.. ஆனால் இலங்கை மீது படை கொண்டு இராவணன் வதமும் முடிந்து இராமன் சீதையைப் பார்க்க இருக்கும் சமயம்..


சீதை தான் அதே கோலத்தில் தான் வர விழைகின்றாள்.. ஆனால். விபீடணன் வேண்டுகோளினால் அலங்காரம் செய்து கொண்டு வருகிறாள். இதைக் கண்ட இராமன் சீற்றம் கொண்டு ,” ஒரு குடும்ப்ப் பெண் கணவல்லாத தருணத்திலே இப்படி அலங்காரம் செய்வாளா என

கம்பராமாயணம் யுத்த காண்டம் திருவடி தொழுத படலம் பாடல் 47 முதல் 55 வரை
இராமனின் சீற்றம்

4 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி

தருமருக்கு பீஷ்மாச்சாரியார் கூறியது : நல்லொழுக்கம் கொண்ட பெண்கள் இருக்க வேண்டிய நிலைகளில் முதலானது கணவன் இல்லாத போது அலங்காரம் செய்து கொள்ளக் கூடாதென்பதாகும்.

இதனை மேலும் வலியுறுத்தும் வண்ணம் விவேக சிந்தாமணி, கம்ப இராமயணங்களில் இருந்தும் எடுத்துக் காட்டியமை நன்று.

நல்வாழ்த்துகள் மௌளி
நட்புடன் சீனா

manjoorraja said...

இந்த அலங்கார விசயத்தில் ஆணாதிக்கமே மேலோங்கியிருப்பதாய் படுகிறது. பண்டைய காலத்திலிருந்தே இந்த ஆதிக்கம் வழிவழியாய் வருகிறது என்பது உண்மையே.

Anonymous said...

கணவன் இல்லாதபோது அலங்காரம் செய்து கொள்வது நல்லொழுக்கம் இல்லைஎன்ற கருத்தை இளைய தலைமுறையை சேர்ந்த நீங்கள் சொல்வது என் போன்ற விதவை களுக்கு மனவருத்தமாக இருக்கிறது.
ஏற்கனவே மனதில் உள்ள சோகத்தை நல்ல ஆடை அணியாமல் வெளியே காட்டிக்கொண்டால்தான் நல்லொழுக்கமா?
uma jayaraman.

சந்திரமௌளீஸ்வரன் said...

உமா ஜெயராமன்,

இந்தப் பதிவில் இருக்கும் எழுத்தினை நான் தான் எழுதினேன்.. ஆனால் அந்தக் கருத்து என்னுடையதல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கின்றேன்.

இந்த பொருளில் விவாதத்தினை நான் தொடங்கவில்லை.. அகாதமிக் இன்டெரெஸ்ட் அளவில் எழுதியிருக்கின்றேன்

கணவன் இல்லை என்றால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டாம் என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடில்லை

எனினும் உங்கள் மனவருத்தத்திற்கு நான் காரணமாக அமைந்திருப்பதாக நினைத்தால் நீங்கள் என்னை மன்னித்துவிடும்படி வேண்டுகிறேன்

உங்கள் கணவரை இழந்த துயரத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.. இறைவன் உங்களுக்கு மிகுந்த ஆறுதலைத் தர வேண்டுகிறேன்.