Monday 6 August 2012

Uniform Civil Code-5

Uniform Civil Code-5

பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாகத்தான் அம்பேத்காரின் கருத்து இருந்தது

" தலைவர் அவர்களே. பொது சிவில் சட்டத்தினை அமுல்படுத்துவதில் அந்தந்த மதத்தின் பெர்சனல் சட்டங்களுக்கு பாதகம் வராமல் செய்ய வேண்டும், என இங்கே உறுப்பினர்கள் முன் மொழிந்த எந்தக் கருத்தையும் என்னால் ஏற்க இயலாது.

நண்பர்கள் கே எம் முன்ஷி அவர்களும், அல்லாடி அவர்களும் நான் பேச விழைந்ததை பேசியுள்ளார்கள்

நண்பர் ஹுசைன் இமாம் கேட்கிறார், இத்தனை பெரிய நாட்டில் எப்படி ஒரே பொது சிவில் சட்டம் சாத்தியமாகும் என .. அவரது வினா எனக்கு ஆச்சரியம் தான் அளிக்கிறது

இத்தனை பெரிய நாட்டில் நம்மால் பொது கிரிமினல் சட்டம் வைத்துக் கொள்ள முடிகிறது, சொத்து பரிமாற்றத்துக்கு பொது சட்டம் வைத்துக் கொள்ள முடிகிறது

இங்கே பேசிய இஸ்லாமிய நண்பர்கள் எல்லோரும் ஓர் உண்மையினை மறந்து விட்டார்கள் என நினைக்கிறேன்.. அதனை அவர்களுக்கு நினைவுக்கு கொண்டு வருவது என் கடமை என நினைக்கிறேன்
1935 ம் ஆண்டு வட மேற்கு எல்லை மாஹாணங்களில் இஸ்லாமியர் அவர்கள் மதம் சார்ந்த சட்டங்களை கைக் கொள்ளவில்லை. அந்த வட்டாரம் முழுமைக்கும் ஹிந்து மதச் சட்டங்களைத்தான் பின்பற்றினர்.. இஸ்லாமியர் உட்பட‌

அந்த பிரதேசம் மட்டுமென உறுப்பினர்கள் நினைத்துவிட வேண்டாம்.. 1937 ம் ஆண்டு வரைக்கும் ஒருங்கிணைந்த மாஹாணம், மும்பை மாஹாணப் பகுதிகளிலும் இஸ்லாமியர்களும் ஹிந்து மதச் சட்டங்களையே பின் பற்றி வந்தனர்.. இது நம் வரலாறு.

என்னுடைய நண்பர் கருணாகர மேனன் சொன்ன தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள்கிறேன்.. அது என்னவெனில் வடக்கு மலபார் பிரதேசத்தில் மறுமகத்திய சட்டம் ஹிந்துக்களுக்கு மட்டுமானது அல்ல.. இஸ்லாமியர்களுக்கானதும் தான்.

ஒன்றை இந்த அவையில் சொல்லிக் கொள்ள விழைகின்றேன்.. இன்று பொது சிவில் சட்டம் என நாம் முன்னிறுத்தும் சட்டம், ஹிந்துக்களுக்கோ வேறு மதத்தினருக்கோ சாதகமாக இருக்கிறதெனவும், இஸ்லாமியருக்கு விரோதமாக இருக்கிறதாகவும் நினைக்க வேண்டாம்.

முன்னிறுத்தப்படும் பொது சிவில் சட்டம் பொருந்தி வரும் தன்மையால் மட்டுமே முன்னிறுத்தப் படுகிறது

பொது சிவில் சட்டத்தினை முன் மொழிபவர்களோ அதனை உருவாக்கியவர்களோ இஸ்லாமியர்ளுக்கு பெரும் தீங்கிழைத்து விட்டார்கள் என கருதுவது சரியில்லாத செய்கை.. அதிலே நியாயமும் இல்லை

பொது சிவில் சட்டத்தை நான் ஆதரிக்கிறேன்.. அந்தந்த மதத்தினரின் பெர்சனல் சட்டங்களுக்கு ஏற்ப அதனை மாற்ற வேண்டும் எனும் கருத்துகளை நான் எதிர்க்கிறேன் என சொல்லி அமர்கிறேன்

இப்படியாக , பொது சிவில் சட்டத்தினை அமுல் படுத்துவதெனில் அதனை அந்தந்த மதத்தினரின் பெர்சனல் சட்டங்களுக்கு பாதகம் வராத வகையில் நிறைவேற்றலாம் எனும் மாற்றங்களை அரசியல் நிர்ணய சபை அன்றை தினத்தில் ஏற்க மறுத்தது.

(தொடரும்)

2 comments:

cheena (சீனா) said...

அன்வின் மௌளி- அருமையாகச் சென்று கொண்டிருக்கிறது - அன்றைய கூட்டத்தில் யாருமே தமிழில் பேசி இருக்க மாட்டார்கள் அல்லவா ? ஆங்கிலம் - உருது ஹிந்தி எனப் பல்வேறு மொழிகளில் பேசி இருப்பார்கள் - தமிழாக்கம் செயத்தௌ தாங்களா ? அழகான தமிழில் எளிய நடையில் எழுதப்பட்ட உரை. நன்று நன்று - தொடர்க பணியினை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

cheena (சீனா) said...

பின்தொடர்பதற்காக