My Dear Bapu, Today the nation and the world celebrate your birthday, Oct 2; In the morning I
happened to read few articles, the authors of those were of course have got the expected
disability of understandings. I always wonder your saying , " My life is my message".
I always preferred to refer you from your own life and writings. I avail this day as a golden
opportunity to request the friends to read Complete Writings of Mahatma Gandhi (available
for free-download in pdf form) and then start reading any interpretations, at least to know
their disability of understanding you Bapu. In your writings you have given clear guidance,
how to understand and approach you, which again confirms your saying , " My Life is my
message"
தேசப்பிதாவே ! இன்றைக்கு நாடும் உலகமும் உங்கள் பிறந்த நாளைக்
கொண்டாடுகிறது. அக்டோபர் 2.. இன்றைக்கு காலையில் சில கட்டுரைகளை
வாசித்தேன். எதிர்பார்த்தது போலவே, அந்தக் கட்டுரை ஆசிரியர்களுக்கு
உங்களைப் புரிந்து கொள்வதில் குறைபாடுகள் இருக்கின்றன. நீங்கள், “ எனது
வாழ்க்கை எனது செய்தி” எனச் சொன்னதை நான் வியந்திருக்கின்றேன்.
அதனால் தான் நான் உங்களை குறித்து சொல்லும் போது உங்கள்
வாழ்க்கையிலிருந்தும், உங்கள் எழுத்துக்களை மேற்கோளிடுவதையே
விரும்பியிருக்கின்றேன். இந்த நாளில் என் நண்பர்களுக்கு ஒரு
வேண்டுகோள் வைப்பதை மகிழ்ச்சியாக நினைக்கின்றேன். உங்களது எழுத்துத்
தொகுதி இப்போது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. அதனை
முழுமையாகப் படித்துவிட்டு , உங்களை விமர்சனம் செய்யும் நூல்களைப்
படிக்க என் நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன், அது அவர்கள் உங்களைப்
புரிந்து கொள்வதில் கொண்டுள்ள குறைபாட்டினை அறிந்து கொள்ள உதவும்.
உங்களை அணுகவும், உங்களைப் புரிந்து கொள்ளவும்
உங்கள் எழுத்துக்களிலேயே தெளிவான் வழிகாட்டுதல் இருக்கிறது. அது
நீங்கள், “ எனது வாழ்க்கை எனது செய்தி” என சொன்னதை உறுதி செய்கிறது
6 comments:
அன்பின் மௌளி - அருமையான இடுகை - மகாத்மா காந்தியினை பற்றி பல்வேறு செய்திகள் இருந்தாலும் - கண்ணோட்டங்கள் இருந்தாலும் - அவர் மகாதமா தான் - இடுகைக்கு நன்றி - நல்வாழ்த்துகள் மௌளி - நட்புடன் சீனா
மௌளீ,
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்.
அவரது ராம ராஜ்ஜியக் கனவு என்றாவது பலிக்க வேண்டும் என்ற நம் கனவு கலையாதிருக்கட்டும்.
சார், உங்கள் அளவுக்கு இல்லா விட்டாலும் ஓரளவுக்கு பவன்ஸ் journals வாயிலாகப் படித்திருக்கிறேன். நிகழ் காலங்களில் சிலருடன் உரையாடும் போது அவர்கள் நேரில் உள்ளவரையில் அவர்கள் சொல்வது ந்யாயம் போலவும், அகன்ற பிறகு இல்லை இவர் நம்பத் தக்கவர் அல்லர், ஏதோ hidden agenda உடன் தான் நியாமான விஷயங்களைக்கூட இவர் எடுத்து வைப்பார் என்று தோன்றும், அதே உள்ளுணர்வு காந்திஜி விஷயத்திலும் எனக்கு ஏற்பட்டு விடுகிறது. நஷ்டம் அவருக்கல்ல, எனக்குத் தான்! உதாஹரணமாக, வைககோம் சத்யாக்ரஹத்தில் non-hindus gap இல் புகுந்து ஓநாய்த் தனமாக குட்டையைக் குழப்பக் கூடாது என்பதில் அவர் காட்டிய தெளிவு, ஹிந்து மதத்திற்கு உள்ளிலும் வைஷ்ணவத்தை முன்னிறுத்தும் ஆணித்தரம், இவ்வளவு ஏன், வர்ணாஸ்ரம தர்மத்தை அந்நாளைய எதிர்மறை சூழலிலும் defend (in fact uphold) செய்த அசாத்திய மனத்துணிவு போன்றவைகளை பகுதி பகுதியாக அவரிடத்தில் நான் ரசித்தாலும், திரண்ட அளவில் வார்த்தை விவரணத்திற்கு அப்பாற்பட்ட ஒரு ஒவ்வாமையை அவர் குறித்து நான் உணர்கிறேன்.
அதே போல், பகுதி பகுதியாக நேஹ்ருஜியின் சொல்லும் செயலும் எனக்கு ஒப்புமை இல்லாவிட்டாலும், திரண்ட அளவில் அவரை நான் மிகவும் மதிக்கிறேன். "இவர் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து பேசுகிறார், அதனால் இவர் கருத்துக்கள் மதிக்கப் தக்கவை", என்று எனது gut feeling சொல்லிக் கொண்டே இருக்கிறது.
Anyway, நயமான அழகான உங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி.
அன்பின்
ராம்
ரசித்தேன்.
53 ஆண்டுகள்! இன்று அவரை விமரிசனம் செய்யும் பலர் அன்று பிறந்துகூட இருந்திருக்க மாட்டார்கள்! இவர்கள் எழுதும் கட்டுரைகளும் இவர்களது மேதாவிலாசத்தைக் காட்ட மட்டுமேயன்றி வேறு என்னவாக இருக்க இயலும்? அன்றையச் சூழலில் மஹாத்மா காட்டிய நெஞ்சுரம் இன்றையப் பலருக்கும் கேலிக்கூத்தாகப் படுவதில் வருத்தம் தான் மிகுகிறது! இதனாலெல்லாம் அவர் புகழ் ஒன்றும் மங்கப்போவதில்லை! வாழி நீ எம்மான்!
அரைவேக்காடு பதிவர்கள் பலர் இருக்கும்
இந்த இணையதளத்தில்,
உங்கள் தளம் ஒரு ரம்யத்தை தருகிறது.தேசப்பிதாவைப்பற்றிய சில பதிவுகள் மிகவும் வருத்தத்தை தந்த நிலையில் உங்கள் பதிவு ஒரு நல்ல மருந்தாக இருந்தது.மிக்க நன்றி.
மனித இனத்தில் இதுவரை தோன்றிய மேதைகளில் டாப் 10 இல் இடம் பெறும் இவர், மகாத்மாவை பற்றி சொல்லும்போது..
"Generations to come will scarce believe that such a one as this walked the earth in flesh and blood"
என்று சொன்னபிறகும் நமக்கு ஏன் தெளிவு வரவில்லை?
Post a Comment