Tuesday, 22 April 2008

கிராமர் கிருஷ்ணமூர்த்தி- அறிமுகம்கிராமர் கிருஷ்ணமூர்த்தி- எனக்கு அமைந்த நண்பர்களில் ஓர் அதிசயம். நம்மை விட சுமார் 20 வயசு ஜாஸ்தியான ஒருவரை நண்பர் என சும்மா பேச்சுக்கு சொல்லலாம்.. ஆனால் கிராமர் கிருஷ்ணமூர்த்தி நிஜமான நண்பர். ” உடுக்கை இழந்தவன் கைபோல “ ரிலையபிள் ஆசாமி. என்ன தொட்டதுக்கெல்லாம் ”உன் இங்கிலீஷ் சரளமா இருக்கு ஆனா நிறைய கிராமர் மிஸ்டேக்” என்று எல்லாரையும் காலை வாரிவிடுவார். புரிந்திருக்குமே “கிராமர் “ என்ற விருதின் பின்புலம்.

நான் இந்த மாதிரி BLOG தொடங்கியுள்ளேன் என அவருக்கு ஒரு எஸ். எம். எஸ் அனுப்பி வம்பில் மாட்டினேன். மறு விநாடி அவர் போனில்,

“ஏம்பா அதென்ன BLOG டிக்‌ஷனிரியில் அப்படினு வார்த்தையே இல்லையே”

“சார் அது ஒருவெப்சைட் மாதிரி. படிச்சு பாருங்கோ ! எப்படி இருந்ததுனு சொல்லுங்கோ “

“ அப்படியா சாவகாசமா படிக்கிறேன்...ஆமா உன்னிடம் ஒரு வேலை சொன்னா நீ என்னப்பா இன்னொருத்தர்கிட்ட கொடுத்துட்டே.. அவர் எப்படி நல்லா பண்ணுவாரா ?”

”சார்.. எனக்கு ஆபிஸில் கொஞ்சம் வேலை டைட்டா இருக்கு அதனால என் சிநேகிதர்கிட்ட கொடுத்தேன். நல்லா பண்ணுவார். He is even better than me”

“ He is better than me னு சொல்லக் கூடாது He is better than I அப்படினு தான் சொல்லனும். நாம சாதாரணமா ME னு சொல்லுமபோது நான் அப்படினு என்னுடைய எனது அப்படி அர்த்தம் பண்ணிக்கிறோம். ஆனா நம்மை மத்தாவாளோட கம்பேர் பண்ணும் போது I தான் கரெக்ட்.. “

பதினாறு பாஷை பேசவும் எழுதவும் தெரிந்த அவரிடம் மேலும் பேசி வம்பில் மாட்ட விரும்பாமல் சிரித்தேன்.

“சிரிக்காதே. இப்பவே உனக்கு இதில் நல்ல ரெபரன்சோட மெயில் அனுப்பறேன் “
சொன்ன மாதிரியே 10 நிமிஷத்தில் மெயில் இருக்கும்

இவர் பல தடவை எல்லாரையும் டீஸ் செய்தாலும், சகல பாஷைகளிலும் விஷயம் கொட்ட கொட்ட பேசுவார். என்ன பேச்சை நிறுத்தத் தெரியாது. அது தான் பிரச்சனை. அவரைப் பற்றி அவர் பெர்மிஷனுடன் எழுதப்போகிறேன்.

3 comments:

dondu(#11168674346665545885) said...

1. He loves that girl better than I

2. He loves that girl better than me.

மேலே கூறிய சொற்றொடர்களில் எது சரி என்று கேட்டால் இரண்டுமே சரிதான்.

எப்படி? இதை அறிய ஒரு வழியை எனது எட்டாம் வகுப்பு ஆசிரியர் ஜெயராம ஐய்யங்கார் அவர்கள் சமீபத்தில் 1958-ல் கூறியுள்ளார்.

வாக்கியத்தை முழுமையாக்குவதுதான் அது.

1. 1. He loves that girl better than I (love that girl).

2. 1. He loves that girl better than (he loves) me.

ஆக இரு வாக்கியங்களுமே வெவ்வேறு விஷயங்களை கூறுகின்றன. நீங்கள் இதில் சொல்ல வந்தது என்னவென்பதுதான் முக்கியம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...
This comment has been removed by the author.
cheena (சீனா) said...

அன்பின் மௌளி

அருமையான அறுபது வயதைக் கடந்த நண்பர் கிடைத்திருக்கிறார். நல்வாழ்த்துகள்.

முதல் மறுமொழியுடன் உடன்படுகிறேன்