Friday 25 April 2008

கிராமர் கிருஷ்ணமூர்த்தி-1


CALL ME PLEASE என்று கிராமர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து எஸ். எம். எஸ். நான் ரொம்ப மரியாதையாக I AM GOING TO COME THERE IN THE EVENING என்று பதில் அனுப்பினேன். உடனே கூப்பிட்டு ஒரு பிடி பிடித்தார்.

”அதென்ன I AM GOING TO COME ; தமிழில் வரப்போகிறேன் அப்படினு சொல்லலாம். காரணம் “றேன்” அப்படிங்க்றது ப்யூச்சர் டென்ஸ். அதையே இங்கிலீஷில் I AM GOING TO COME சொல்றது தப்பு. I WILL BE COMING இப்படி சொல்லு“

”அதில்ல சார் விஷயம் அர்த்தமாயிடுத்தில்ல”

”நீ சொன்னா கேட்க மாட்டியே. இப்ப நான் ஒன்னு சொல்றேன். WHAT IS YOUR NAME இதை தமிழில் எப்படி சொல்வே “

“ உங்கள் பெயர் என்ன”

“பார்க்கப்போனா WHAT IS YOUR NAME இதை தமிழில் அட்சரமா மொழிபெயர்த்தால் உங்கள் பெயர் என்னவாக இருக்கிறது – இப்படித்தானே வரணும்- இப்ப புரியுதா. ஒவ்வொரு பாஷைக்கும் ஒரு வழக்கு இருக்கு”

“சரி தான் சார்”

“ சந்தோஷம். ஆமாம் என்னைப் பத்தி எழுதறேன்னு சொல்லிட்டு என்னையே அச்சு அசலா வரைஞ்சு போட்டிருக்கே”

” அது என் அண்ணா கண்ணன் வரைஞ்சது சார்”

”என்னை உன்னோட செல் போன்லே போட்டோ பிடிச்சு அனுப்பினியா”

“இல்லை சார் உங்களைப் பத்தி சொன்னேன். கொஞ்சம் அடையாளங்களும் சொன்னேன். அதை வச்சிண்டு வரைஞ்சார்”

அப்படியே என்னை மாதிரியா இருக்கு. நான் ரொம்ப சந்தோஷம்னு சொன்னேன்னு உன் அண்ணாகிட்டே சொல்லு. அப்புறம் என்ன பார்க்க வரச்சே உன் கல்யாணப் பத்திரிக்கை கொண்டு வா”

“சார் எனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கு. இப்ப போய் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்றேளே”

“போனை உன் பொண்டாட்டிக்கிட்ட குடு.. அப்ளக் குழவியால தலையில நங்னு போடச் சொல்றேன். உன் கல்யாணப் பத்திரிக்கை கொண்டு வா. சொல்றேன்.”

போனை வைத்துவிட்டார்.

என் கல்யாணப் பத்திரிக்கையில் இவர் என்ன செய்யப் போகிறார். ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. அதனால இந்த கல்யாணமே செல்லாது என்று சொல்லிவிடுவாரோ. போய்த்தான் பார்க்கலாம்

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி,

தவறாக எண்ண வேண்டாம்.

இதோ இப்பச் செய்யப்போறேன்

நாளைக்குச் செய்யப்போறேன்

I am going to do it now

i am going to do it tomorrow

முதல் சொற்றொடர் சரி எனவும் இரண்டாவது சொற்றொடர் மாற்றலாம் எனவும் தோன்றுகிறது

மங்களூர் சிவா said...

//
அப்புறம் என்ன பார்க்க வரச்சே உன் கல்யாணப் பத்திரிக்கை கொண்டு வா”

“சார் எனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கு. இப்ப போய் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்றேளே”

“போனை உன் பொண்டாட்டிக்கிட்ட குடு.. அப்ளக் குழவியால தலையில நங்னு போடச் சொல்றேன். உன் கல்யாணப் பத்திரிக்கை கொண்டு வா. சொல்றேன்.”

போனை வைத்துவிட்டார்.

என் கல்யாணப் பத்திரிக்கையில் இவர் என்ன செய்யப் போகிறார். ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. அதனால இந்த கல்யாணமே செல்லாது என்று சொல்லிவிடுவாரோ. //

haa haa

:))))))