Saturday, 12 April 2008

சுஜாதாவுக்கு இமெயில் CC TO ஆழ்வார்கள்


சுஜாதா சார்,

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் படித்தேன் (விசா பதிப்பகம்). அது தொடராக வரும்போதே ஒரு தடவை படித்திருக்கிறேன்

“பிரபந்தத்தில் நேரடியாக கீதையைப் பற்றிய செய்தி எங்குமே இல்லை என்று ஒரு கருத்து உண்டு. பார்த்தனுக்கு தேர் ஊர்ந்தது இருக்கிறது. ஆனால் அவனுக்கு கீதாபதேசம் செய்தது நேரடியாக நாலாயிரம் பாடல்களில் எதிலும் இல்லை. வார்த்தை என்று ஓர் இடத்தில் மட்டும் திருமங்கையாழ்வார் பாசுரத்தில் வருகிறது என்று காஞ்சிபுரத்தில் ஒரு சுவாமி சொன்னார். அதை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்”

என்ன சார் இப்படி சொல்லிவிட்டீர்கள்??

திருவரங்கமுதனார் அருளிச்செய்த ராமனுஜ நூற்றந்தாதியும் சேர்த்து தானே 4000.. அப்படியானால் அதில் 68 ம் பாடல் பாருங்கள்

ஆரெனெக்கின்று நிகர் சொல்லில்
மாயனன் றைவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மை.....


திருமழிசைஆழ்வார் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி பாடல் 71 ஐ ப் பாருங்கள்

"மாயன் அன்றோதிய வாக்கதனை"... என்று வருகிறதே. இது கீதையை நேரடியாகத்தான் குறிக்கிறது

நீங்கள் பிரபந்தத்தில் தேடிய அந்த ”வார்த்தை” திருமங்கையாழ்வார் பாசுரத்தில் இல்லை.

அது உங்களின் பேவரைட் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருக்கிறது

வார்த்தையறிபவர் மாயவற்காளன்றி யாவரோ (திருவாய்மொழி 7-5-10)

நம்மாழ்வார் இன்னுமொரு பாசுரத்தில் திருவாய்மொழி (4-8-6)

“அறிவினால் குறைவில்லா
அகல் ஞானத்தவரறிய
நெறியெல்லாம் எடுத்துரைத்த
நிறைஞானத்தொருமூர்த்தி ....”

இப்படி சொல்வது கீதையைப் பற்றித்தான்

திருவாய்மொழி நான்காம் பத்து எட்டாம் திருவாய் மொழியில் இது 6 வது பாசுரம்.

சார் உடனே அங்கே ஆழ்வார்களுடன் அரட்டைக்கு உட்கார வேண்டாம். இங்கே வாரம் ஒரு பாசுரம், கற்றதும் பெற்றதும், ஷங்கரின் ரோபோ என்று பல சங்கதிகள் போட்டது போட்டபடி இருக்கிறது.

நேரே பெருமாளிடம் போகவும் “இதோ பார்.. நிமோனியா.. அது இது என எதுவும் இல்லாமல் ஒரு 300 வருஷம் லைஃப் எக்ஸ்டென்ஷன் வேணும்.. நிறைய படிக்கணும் எழுதனும் “ அப்பிடினு கரறாரா சொல்லிட்டு அவரோட புஷ்பக விமானத்தை எடுத்துக் கொண்டு வந்து சேரவும்

4 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி

கடைசிப் பத்தியை அப்படியே வழி மொழிகிறேன். பெருமாளைப் பார்த்திருக்க வேண்டும் - 300 ஆண்டு கேட்டிருக்க வேண்டும் - அவர் செய்ய வில்லை.

பத்மநாபன் said...

கடைசி வரிகளை படித்தவுடன் ... வாத்தியாரை எவ்வளவு இழந்துள்ளோம் எனும் நினைப்பு மேலிட சொட்டி தள்ளின கண்கள் ...என்ன பந்தமோ ..

Ravi said...

ஜெய் ஸ்ரீமன் நாராயணா. ஆஹா எத்தனை சகஜமான இமெயில். பெருமாளோட புஷ்பகவிமானத்துல பறந்து வந்துடுங்கோ பெருமாள் சொன்னா கேட்பார் தெரியுமோல்யோ. மொளிசார் அற்புதம் தப்பா நினைக்கப்டாது. பொதுவா வைஷ்ணவா தான் பெருமாளோட/ஆழ்வாரோட தனக்கு இஷ்டப்பட்டவாளோட இப்படி சகஜமா பேசுவா. உமக்கு உலகத்துல இருக்கிற எல்லா பெருமாளோட அனுக்ரஹமும் நிறைய இருக்கு. தாஸன். இனி நேரம் கிடைக்கும்போதெல்லாம் தேவரீர் எழுத்துக்களை வாசிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். 10 சுஜாதாவை வாசித்தது போலிருக்கிறது.

sankar said...

சுஜாதா இவாள்லாம் என்ன சொன்னாலும் தியேட்டரு பாத் ரூமில் நமக்கு முன்ன உள்ளவன் கொடம் கொடமா ஊத்தறத - நீ எண்ணை வாங்கப்போன ஸ்ரீரெங்கம்- நீ ஆடின கிரிக்கெட்டு நாட்டுப்பாடலோட கரையில பூத்த செண்பகங்கள் - கணேஷும் வசந்தும் - என்ன இருந்தாலும் ஒன்னால இங்கருந்து அங்க வரைக்கும் முடியாதுன்னு வசந்து அவட்டக்க சொன்னது - எல்லா மனசிலையும் வாழுது இன்னம் - விஷ்நுட்டக்க போயி இன்னம் என்ன கருடன் பி ஈ எல் லுக்கு வா எப் எப் எப் ஆர் எ எ ௧௨௩ வெர்ஷன் 7 . 9 பண்ணித்தர்றேன் வாண்டு கூட்டிண்டு வந்துரு மும்பை லோக்கல்ல கூட்டிண்டுபோய் மகாலட்சுமி காமிக்க லாம் வா