Wednesday, 19 March 2008

பிரேயர் வீல்



பல நாட்டு கலாச்சார சின்னங்களை சேகரிக்கும் பிரேமை எனக்கு உண்டு. எகிப்து பிரமிட் மாடல், ஆஸ்திரேலியாவில் வாங்கிய கங்காரு பொம்மை , சொம்பில் அடைக்கப்பட்ட DEAD SEA தண்ணீர் என என்னிடம் ஒரு விஷேஷ கலெக்க்ஷன் உள்ளது.


இங்கே படத்தில் உள்ளது மாதிரியான் ஒரு பிரேயர் வீல் எனது அந்த ஆத்மார்த்தமான கலெக்க்ஷனில் ஒரு முக்கிய அங்கம்.

என் ஆபிஸில் எனது சீனியர் சுஜாதா ஜெகந்நாத், சீனா சென்று வந்த தன் மகள் மூலம் அதை எனக்கு தருவித்து தந்தார். அவருக்கு எனது நன்றி.

திபேத்திய புத்த மதத்தில் இந்த பிரேயர் வீல் ஒரு முக்கிய் சமாச்சாரம். இந்த மாடல் மணி வீல். இன்னும் பயர் வீல், விண்ட் வீல், வாட்டர் வீல் என பஞ்ச பூதங்களில் பூதத்துக்கு ஒன்றாக மாடல்கள் இருக்கிறது. மணி வீல் சாதரண்மாய் கையில் வைத்து சுற்றிக் கொண்டே ஜபம் செய்யும் ஒரு பூஜா சமாச்சாரம், இதை கிளாக் வைசாக சுற்ற வேண்டும் என கிரமம் உள்ளது. காரணம். இதற்குள் பல மந்திரங்கள் தோலில் எழுதி சுற்றி வைத்திருக்கிறார்கள். மந்திரங்கள் எழுதப்பட்டுள்ள DIRECTION க்கு தகுந்த மாதிரி சுற்ற வேண்டும் அப்பிரதஷணமாக சுற்றினால் அவ்வளவு தான்.

இந்த வீலை சுற்றும் பொது "ஓம் மணி பத் மே ஹம் " என்ற மந்திரமே பெரும்பாலும் சொல்லப்படுகிறது. நானும் சொல்கிறேன். இது ஸம்கிருதத்தில் இருந்து திபேத்திய புத்தர்கள் CTRL + C & CTRL + V செய்தது. அர்த்தம் வருமாறு


ஓம் --- தபஸ் / அமைதியான நிலை கொண்ட மனம்
ம- பொறாமை போகட்டும்
ணி- - ஓழுக்கம் வளரட்டும்
பத் ---- ஞானம்
மே --- சகிப்புத்தன்மை, அன்பு, தாரால குணம்
ஹம்- வெறுப்பற்ற தன்மை வரட்டும்- நல்லதில் ஈடுபாடு ஜாஸ்தியாகட்டும்.

இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டே இந்த பிரேயர் வீலை சுற்றினால், துஷ்ட சக்திகள் நம்மை அண்டாது / அணுகாது என்பது நம்பிக்கை.

எனது மனைவி நகை, பட்டுபுடவை என்று எனது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் என்ற ஐஸ்வர்யங்களுக்கு எதிரான துஷ்ட PROPOSAL லுடன் பேசப் போகிறாள் என லேசாக தெரிந்தாலும் போதும் - உடனே இந்த பிரேயர் வீல் அந்த மந்திரம் சகிதமாக நிஷ்டையில் அமர்ந்து தப்பித்து கொள்வேன்.

1 comment:

cheena (சீனா) said...

நல்ல பதிவு - பிரேயர் வீல் பற்றிய விபரம் நல்ல முறையில் சொல்லப்பட்டிருக்கிறது - சுஜாதா, மற்ரும் சீனா பெயர் வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது