Thursday 24 April 2008

பூமி ரொம்பப் பெரிசு


பூமிக்கு வெளியே ஒரு இடம் தாருங்கள்.. பூமியை கொஞ்சம் நகர்த்திக் காட்டுகிறேன் என ஆர்க்கிமிடிஸ் சொன்னதை படித்திருப்பீர்கள். நெம்பு கோல் தத்துவத்தை கண்டுபிடித்த ஆர்வத்தில் கொஞ்சம் அதிகமாய்ச் சொல்லிவிட்டார். பூமிக்கு வெளியே இடம் தர முடியாது. அப்படி வந்தால் பார்துக்கலாம் என நினைத்திருப்பார்.

இதைக் கொஞம் விவரமாகப் பார்க்கலாம்

60 கிலோ எடை உள்ள ஒரு பாறாங்கல்லை ஒரு மீட்டர் அந்தண்டை தள்ளி வைக்க சுமார் ஒரு குதிரை சக்தி எனர்ஜி வேண்டும் வேண்டும். சுமார் ஒன்றரை மீட்டர் நீளமான நல்ல கடப்பாரை வேண்டும். இந்த ரீதியில் கணக்கு செய்தால் 6000000000000000000000 டன் எடையுள்ள பூமியை ஒரு செண்டிமீட்டர் நகர்த்தவே அவருக்கு 1000000000000000000 கிலோ மீட்டர் நீளமான கடப்பாரை வேண்டும். இப்படி கின்னஸ் சைஸ் கடப்பாரை செய்யத பின் பூமியில் இரும்பே இருக்காது. சரி இதெல்லாம் செய்து கொடுத்துவிடுவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும். இந்த ராட்சச காரியம் செய்து முடிக்க அவர் எவ்வளவு நேரம் ம் .... ம் ...... ம்.... ம் ..........ம்... னு தம் கட்டணும் தெரியுமா 1000000000000000000000 விநாடிகள் அதாவது 30 மில்லியன் மில்லியன் வருஷங்கள். ஆர்க்கிமிடிஸ் ஒரு வேளை ஒளி வேகத்தில் அதாவது ஒரு செகண்டுக்கு 30000 கிலோமீட்டர் வேகத்தில் முக்கினால் கூட பத்து மில்லியன் வருஷம் முக்கினால்தான் பூமி சும்மா ஒரு செண்டி மீட்டர் நகர்ந்து கொடுக்கும்

இந்த மாதிரி பூமியை அநாயசமாக நகர்த்துவது இல்லை சும்மா மூக்கிலே வைத்து தூக்கிண்டு வரதெல்லாம் பெருமாளாலதான் முடியும்.

திருமங்கையாழ்வார் சொல்வதைக் கேளுங்கள்

சிலம்பினிடைச் சிறுபரல்போல்
பெரிய மேரு
திருக்குளம்பில் கணகணப்பத்
திருவா காரம்
குலுங்க, நில மடந்தைதனை
யிடந்து புல்கிக்
கோட்டிடைவைத் தருளியவெங்
கோமான் கண்டீர்,

1 comment:

cheena (சீனா) said...

பெருமாள் பெருமாள் தான் - செஞ்சிட்டரு - ஆர்க்கிமிடீஸுக்கு ... எப்பா இவ்வவளவு கால்குலேஷனா ? அப்பத்தான் முடியுமா ? அதுவும் பூமிக்கு வெளியே வந்து ...... ம்ம்ம் - பூமி ரொம்பப் பெரிசுதான் மௌளி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா