Wednesday 6 April 2011

ஏப்ரல் 13

ஏப்ரல் 13 . மிக முக்கியமான நாள்.. இங்கே தேர்தல் நடக்கவிருப்பதால் சொல்லவில்லை. இதே ஏப்ரல் 13 1919 .. ஜாலியன் வாலாபாக்..

வாக்களிக்க செல்லும் முன்பு அந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை ஒரு நிமிடமாவது நினைக்க வேண்டும்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணமாக தாகூர் தனக்கு வழங்கப்பட்ட KnightHood பட்டத்தை துறந்தார்

அப்போது வைசிராய் அவர்களுக்கு தாகூர் ஒரு கடிதம் எழுதினார்

"The time has come when badges of honour make our shame glaring to their incourageous context by humiliation, and I for my part, wish to stand shorn of all special distinction by the side of those my countrymen who for their so-called insignificance , are liable to suffer
degradations not fit for human beings and these are the reasons which have painfully compelled me to ask Your Excellency with due deference and regret, to release me of my title knighthood"

பிரிகேடியர் ஜெனரல் டயர் ஆணைக்கு இணங்க நடந்த அந்த கொடூர சம்பவத்தை அப்போதைய பஞ்சாபின் லெப்டினட் கவர்னர் மைக்கேல் ஓட்வையர் சரிதான் எனச் சொன்னது தான் கொடூரத்தின் உச்சம்

ஒட்வைர் vs நாயர் எனும் புகழ் பெற்ற வழக்கிலே ஹௌஸ் ஆஃப் லார்ட்ஸ்ம் நீதிபதி மெக்கார்டியும் டயர் செய்த்தது சரிதான் என சொல்லிவிட்டார்கள்

ஆனால் ப்ரிடிஷ நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்கிவித் இந்த சம்பவம் நாட்டின் மிக கொடூரமான மனிதாபிமானமன்ற செய்கை எனச் சொன்னார்

ஓட்வயரின் செய்கையைனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நாயர் : சேட்டூர் சங்கரன் நாயர். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குறைஞராகவும் பின்னர் நீதிபதியாகவும் இருந்தவர்

பஞ்சாப் பல்கலைக்கழகம் ஏப்ரல் 13 , 1969 அன்று ஒரு ஆய்வு அறிக்கை வெளியிடுகிறது (ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 50 ஆண்டுகள் கடந்து) அதில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கான திட்டம் லாகூரில் ஏப்ரல் 8, 1919 அரசு மாளிகையில் ஓடைவயர் முன்னிலையில் பல ப்ரிடிஷ் அதிகாரிகள் முன்னிலையில் தீட்டப்பட்டது எனவும் அதை baishakshi day எனும் நாளில் நிகழ்த்தினால் பஞ்சாப் முழுவதும் பயம் விளைவிக்க ஏதுவாகும் எனவும் விவாதிக்கப்பட்டது என சொல்லப்பட்டுள்ளது

இந்த ஓட்வயர் உத்தம் சிங் எனும் இந்திய இளைஞரால் சுட்டுக் கொல்லப்பட்டான்

அதற்காக தூக்கிலிடப்பட்டான்

உத்தம் சிங் பெயரில் உத்ரகாண்ட் மாநிலத்திலே ஒரு மாவட்டம் இருக்கு

அம்மாவட்ட நிர்வாகத்தின் சுட்டி

http://usnagar.nic.in/

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - வரலாறு எளிதில் மறக்கடிக்கப்படுகிறது. இது மாதிரி யாராவது நினைவு படுத்தினால் தான் உண்டு. தகவலுக்கு நன்றி. நல்வாழ்த்துகள் மௌளி - நட்புடன் சீனா

சுரேகா said...

அன்று அவர்கள் உயிர் சுட்டார்கள்..!
இன்று இவர்கள் ஓட்டு சுடுகிறார்கள்..!

மனிதாபிமானத்துக்கு இங்கே என்ன வேலை!

நல்ல நினைவூட்டல் சார்!