Monday, 9 May 2011

இந்தியன் பீனல் கோட்


1860 ம் வருடம் இந்தியன் பீனல் கோட் ( Indian Penal Code) அமுலுக்கு
வந்தது. அவ்வப்போது கால சூழலுக்கு ஏற்ற மாற்றங்களுடன் இன்னும் அது இந்திய கிரிமினல் சட்ட நடைமுறைகளில் ஒரு முக்கியமான சட்டம்.

இபிகோ என்பது தண்டனைச் சட்டம்

மஹாபாரதத்தில் யுத்தம் முடிந்த பின் இருதரப்பிலும் இறந்துபட்ட குருவம்சத்தாரின் உடல்களின் அடக்கம் அவர்களுக்கு செய்ய வேண்டிய ஈமக்கடன்களை மஹரிஷி தௌம்மியரைக் கொண்டு தர்மன் செய்கிறான். ஈமக் கடன்கள் செய்து முடித்த நிலையிலே அவன் மிகுந்த சோகத்திலே இருக்கிறான், இத்தனை மரணங்களா என்ற எண்ணம் அவனை மிகவும் துயரப்படுத்துகிறது

இந்நிலையில் தான் அரசனாகப் பொறுப்பும் ஏற்க வேண்டும். உறவினர்களின் மரணம் என்ற கவலை ராஜ்யப் பொறுப்பேற்க்க வேண்டிய கடமைமையினையும் தாண்டி அவனை வாட்டுகிறது.

தனக்கு அரசப் பதவி வேண்டாம். காட்டுக்குப் போய் தவ வாழ்க்கை மேற்கொண்டு
அங்கேயே மடிகிறேன் என்ற நிலைக்கு வருகிறான்

அவனை திருதராஷ்டிரன், தௌம்மியர், வியாசர், கிருஷ்ணர், அர்ஜுனன், பீமன்,
நகுலன், சகாதேவன், திரௌபதி எல்லோரும் தேற்றுகின்றனர்

இதிலே மற்றெல்லோரது அறிவுரைகளைவிட அர்ஜுனனது அறிவுரை முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது (கிருஷ்ணனிடம் கீதை கேட்ட Effect போலும் !!!!)

அர்ஜுனனின் பேச்சு அரசனின் தண்டனை அதிகாரங்களைப் பற்றிய அறிவுரையாகவும் அற உரையாகவும் இருக்கிறது

இந்த இடத்திலே க்ருத யுகத்திலே ஆக்கப்பட்ட ஒரு லட்சம் ஸ்லோகங்களால் ஆன வைசலாட்சகம் என்ற தண்டனை சாஸ்திரம் குறித்தும் அது பின்னர் எப்படி
படிப்படியாக Concise ஆக்கப்பட்டது என்பதைப் பற்றியும் வியாசர் சொல்கிறார்

வைசலாட்சகம் பிரம்மாவால் 1,00,000 ஸ்லோகங்கள் கொண்டதாக முதலில்

சமைக்கப்பட்டது. இது என்ன இத்தனை ஜாஸ்தியாக இருந்தால் எப்படி எல்லோரும் இதை படித்து பின்பற்ற சிரமமாக இருக்குமே என சிவபெருமான் அதை 10,000 ஸ்லோகங்களாக சுருக்கினார்.பின்னர் இந்திரன் அதை 5,000 ஸ்லோகங்களாகவும், அதன் பின்னர் பிரஹஸ்பதி 3,000 ஸ்லோகங்களாகவும் அதன்பின் அசுர குருவான சுக்கிராச்சாரியார் 1,000 ஸ்லோகங்களாகவும் சுருக்கியதாகவும் வியாசர் குறிப்பு தருகிறார்.

இன்று இபிகோ விலே 511 செக்‌ஷன் தான்

(இந்தப் பதிவுக்கான படத்துக்கும் அடுத்த பதிவுக்கும் தொடர்பு ஜாஸ்தி)

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - அருமையான் அதகவல் விளக்கம் - அடுத்த இடுகை படித்து, பிறகு மறுமொழி இடுகிறேன். நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா