இந்த தொடரில் இந்த குறிப்பிட்ட பதிவு இடைச் செருகல் போலத் தெரியலாம். காரணம் தொடர்ச்சியில் இல்லாமல் சற்றே நிரடுவது போலவும் எனக்குத் தோன்றியது. இந்தப் பதிவு இத் தொடரின் முதல் பதிவாக வந்திருக்கலாம்.. ஆங்கிலத்தில் ப்ரொலாக் எனச் சொல்லுவார்களே அது போல. ஆனால் அப்படி அல்லாமல் இடையில் வந்துவிட்டது
ஒரு பகல் நேர இரயில் பயணத்தின் போது இரண்டு சக பயணிகளுக்கிடையேயான உரையாடலாக இந்த தொடர் இருந்தாலும் , அது தவிர காந்தியார் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் பிறருடன் விவாதித்துக் கற்றுக் கொண்டவை, அவர்களுக்கு பதில் சொல்வதற்காக பிரத்தியேகமாக தேடிப்படித்தவை என்பதையும் உள்ளடக்கியதாக இருக்கிறது என்பதையும் சொல்லி விடுகிறேன். அவை அனைத்தினையும் படைப்பின் சௌகரியத்துக்காக ஒரே உரையாடலாக மெர்ஜ் செய்து கொண்டேன்.
ஆனாலும் என்னுடன் உரையாடிய அவர்களைக் குறித்து சொல்வது பொருத்தமாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு என் நன்றியினைத் தெரிவிக்கும் விதமாகவும் இந்த பதிவினை கருதலாம்
மூத்த இதழாளர் திரு மாலன் அவர்களின் நூல் ஜனகனமண வுக்கு நான் விமர்சனம எழுதிய போது அதனைப் படித்து விட்டு என்னைத் தொடர்பு கொண்ட பிரதாப் இராஜெந்திரன் எனும் மாணவரை முதன்மையாகச் சொல்ல வேண்டும். காந்தியாரின் பிற மதக் கொள்கைகளை முன்பு எத்தனையோ முறை படித்திருந்தாலும் அவற்றை மாற்றுக் கருத்துகளுக்கு எதிர் உரை போல சமைத்துக்
கொண்டு கற்றுக் கொள்ள சந்தர்ப்பம் தந்தவர் என சொல்ல வேண்டும்
இணையத்தில் உள்ள சௌகர்யங்களை சொல்லும் போது நட்பு வட்டம் பெருகும் என்பதை முதலில் சொல்லுவார்கள். அதனை நிஜமாக்கிய கார்த்திக் சுப்ரமணியன் பெங்களூருவில் மிகப் பிரபலமான மென்பொருள் நிறுவனத்தில் பணி செய்கிறார். சுஜாதாவின் மரணத்தின் போது பல தளங்களில் பரிமாறிக் கொள்ளப்பட்ட ஆறுதல் மொழிகளின் வழி தொடர்பு கொண்ட மிக நல்ல நண்பர். அந்த
வகையில் செத்தும் கொடுத்த சீதக்காதி ஆனார் சுஜாதா . அவர் உயிரோடு இருக்கும் போது அறிமுகம் செய்த புத்தகங்களால் அவர் புரவலனாகவும் நான் பெறும் நிலையிலிருந்தேன். அவருடைய மறைவில் கூட நல்ல புத்தக அறிமுகங்கள் எனக்கு கிடைக்க கார்த்தி கிடைத்தார்
கூகிள் சாட்டினை நான் எனது மெயில் அக்கௌண்டில் சேமிப்பது வழக்கம் . அவற்றினை லேபிள் அடையாளம் வைத்து வகைப்படுத்தியும் வைத்திருக்கிறேன்;
காந்தி எனும் பொருண்மையில் கூகிள் சாட்டில் நான் பிறருடன் செய்த உரையாடல்களை காண்பி என நான் கூகிளுக்கு உத்தரவிட்டால் அது இதோ என விளக்கில் இருந்து வந்த பூதம் செய்வது போலவே உடனே நிறைவேற்றியது. அந்த உரையாடல்களில் பெரும்பான்மை கார்த்தியுடன் நான் செய்த உரையாடல்கள் தான். பிப்ரவரி 2009 தொடங்கி நேற்று வரை இருக்கும் அவருடன் நடந்து கூகிள் சேமித்துள்ள உரையாடலில் காந்தி இல்லாத உரையாடல்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவற்றினையும் மீண்டும் படித்து லேபிள் செய்தால் அவை காந்தி எனும் லேபிள் கொடுக்க நான் மறந்திருப்பேன் என்பது தெரிந்து விடும். அப்படி எல்லா உரையாடலிலும் காந்தி
காந்தி எனும் அவரின் வியப்பு
எனது தந்தை இயற்கை எய்தி அதற்காக ஓராண்டு நிறைவில் செய்யும் க்டமைகளை செய்வதற்காக எனது மூத்த சகோதரர் இல்லத்திற்கு மதுரை சென்றிருந்தேன். அப்போது எனது சகோதரியின் கணவருக்கு நண்பரான பல மருத்துவர் ஒருவரை சந்திக்க அவர் சென்ற போது நானும் உடன் சென்றேன். அப்போது அந்த மருத்துவர் இந்தியாவின் இன்றைய அவல நிலைக்கு காந்திதான் காரணம் என்று சொன்னார். அவருக்கு நான் உரைத்த பதிலை இந்த தொடரில் தகுந்த இடத்தில் மெர்ஜ் செய்திருக்கிறேன்
பதிவுகளின் வழக்கமான இலக்கணமான படம் சேர்த்தல் இல்லாது தான் இந்த தொடரை எழுத்த் தொடங்கினேன். ஆனால் காந்தியாரின் படம் இல்லாமல் இருப்பது ஒரு குறை போலவே நெருடலாக இருந்தது. அதே நேரம் இதற்காக இணையத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட படங்களை இதற்காக உபயோகிப்பதில்லை என எனது ஆழ்மனம் ஒரு தீர்மானத்தினை அதுவாகவே நிறைவேற்றிக் கொண்டுவிட்டது. ஒரு ரயில் பயணத்தில் இரண்டு பேர் பேசிக் கொண்டு வருவது போல் கருப்பு வெள்ளை போட்டோ கிடைக்குமா என உமாநாத் எனும் இணைய நண்பரிடம் கேட்டேன். இவர் விழியன் எனவும் அறியப்படுவார் . இவரது புகைப்பட கலை மீது எனக்கு தனி
ப்ரேமை உண்டு ; அவர் சில நாட்கள் அவகாசத்தில் செய்து தருவதாக சொன்னார்.
இணையம் வழி அறிமுகம் ஆனவர் ஜீவா நாதன். சட்டம் பயின்ற ஓவியர். கோவையில் வசிக்கிறார். ஃபேஸ் புக் மூலம் அறிமுகம் ஆனவர். எனக்கு ஒரு காந்தி படம் வேண்டும் எனறவுடன் நோக்கத்தினைக் கேட்டுக் கொண்டு சம்மதித்து 24 மணி நேரத்தில் எனது மெயில் பாக்ஸிற்கு டெலிவரியும் செய்து விட்டார். இங்கே இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ள காந்தி
ஜீவா நாதன் தனது திரைச்சீலை எனும் திரைப்படங்கள் தொடர்பான நூலுக்காக தேசிய விருது பெற்றவர் என்பதில் அவருக்கு இருக்கும் மகிழ்ச்சியை விட தேசிய விருது எனும் பெருமைக்குரியவர் என் பதிவுக்கு என பிரத்தியேகமாக வரைந்து தந்திருக்கிறார் என்பதில்
எனக்கு இருக்கும் மகிழ்சியும் பெருமையும் ஜாஸ்தியாக இருக்கும் என்பது நிச்சயம் .. அவருக்க் என் மனமார்ந்த நன்றி
(பயணம் தொடரும்)
3 comments:
Hey - I am definitely glad to discover this. Good job!
அன்புள்ள மௌளீ,
வழக்கறிஞர் / ஓவியர் ஜீவா உங்களுக்காக பிரத்யேகமாக வரைந்து கொடுத்த காந்தி ஓவியம் மிக அருமை. சமீபத்தில்தான் அவரது தளம் மற்றும் திரைச்சீலை நூல் பற்றிய அறிமுகம் கிடைத்தது.
அன்புள்ள மௌளீ,
வழக்கறிஞர் / ஓவியர் ஜீவா உங்களுக்காக பிரத்யேகமாக வரைந்து கொடுத்த காந்தி ஓவியம் மிக அருமை. சமீபத்தில்தான் அவரது தளம் மற்றும் திரைச்சீலை நூல் பற்றிய அறிமுகம் கிடைத்தது.
Post a Comment