Saturday 14 May 2011

முரசொலி கவிதை


தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த 'சுப வேளை'யில் மிக மும்முரமாக அலுவல் பணியில் ஈடுபட்டிருந்தேன். அவ்வப்போது இணையத்தின் உதவியில் செய்திகளைக் கவனித்து வந்தேன். மாலை எந்த போக்குவரத்து சிக்னலிலும் சிக்காமால் ஒரு சின்ன ஆச்சர்யத்தை வியந்து கொண்டே இல்லம் திரும்பினேன். என்னை திமுக அனுதாபியாக உருவகம் செய்து வைத்திருந்த அண்டை வீட்டார், 'என்ன சார் உங்க ஐயா தோத்துட்டார் போலிருக்கே" என வர வழைத்துக் கொண்ட சோகம் கப்பிய முகத்துடன் விசாரித்தனர். எனக்கே உரித்தான பாவனையில் ,'ஏதோ உங்க அம்மா செய்த புண்ணியம்' என பதில் சொல்லி இல்லம் புகுந்தேன்.

இரவு உணவுக்குப் பின் வழக்கமாகப் பழகும் அந்த நாளைய சிந்தனைத் தொகுப்பு பயிற்சியினை ”உங்க ஐயா !!! உங்க அம்மா !!! “ எனும் சொற்றொடரின் பின் புலச் சிந்தனைகள் வெட்டிக் கொண்டே இருந்தன.

அரசியல் நிகழ்வுகளில் நாம் கொள்கைகளாகப் பிரிந்துள்ளோமோ எனில் சந்தேகம் தான். காரணம் அந்தக் கொள்கைச் சொந்தக்காரர்களுக்கே அவற்றின் மீது எத்தனை விழுக்காடு நம்பிக்கையும் பற்றும் இருக்கும் என்பது சந்தேகம். ஆனாலும் அந்த சொந்த்க்காரர்களை ரசித்து விட்ட காரணத்தால் அவர்களின் அபத்த பயணங்களில் நாமும் பயணமாகி நம் இலக்கைத் தொலைக்கின்றோம். பார்த்தால் மொத்த வாக்காளர்களும் இலக்கைத் தொலைத்த கூட்டம் போல் தான் தெரிகிறது. பயணத்தின் இறுதியில் நாம் இலக்கு மாறி பயணித்திருப்பது தெரிகிறது. அடுத்த நிகழ்வுக்கு காத்திருந்து பயணிக்கும் போதும் இது மறுபடி நிகழ்கிறது

இந்த சிந்தனை ஓட்டம் துறந்து எனது புத்தக அலமாரியை நாடினேன்

மெக்காலேவின் கவிதைகள் "இதோ நான்" எனச் சொல்வது போல் இருந்தது; புத்தகம் சேகரித்து பக்கங்களைப் புரட்டினேன்

Idealised Rome குறித்த வரிகள்

Then None was for a party
Then all were for the state
Then great man helped the poor
and the poor man helped the great
Then lands were fairly portioned
Then spoils were fairly sold;
The Romans were like brothers
In the brave days of Old

இதை தமிழில் மொழி பெயர்ப்பது அவசிய்மில்லை என நினைக்கிறேன்

இப்போதும் அந்த கவிதை என்னுள் முரசொலித்துக் கொண்டிருப்பதால் தலைப்பை இப்படி வைத்தேனல்லாது வேறு காரணம் ஏதுமில்லை

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - இப்பொற்காலம் தமிழ் நாட்டிற்கோ - இந்தியத் திரு நாட்டிற்கோ வரவே வராது. - நட்புடன் சீனா