Tuesday 17 May 2011

கவர்னர் கவனிக்க மறந்தாரா


மே 13 அன்று வாக்கு எண்ணிக்கையில் திமுக தோல்வி அடைந்தது அப்போதைய முதல்வர் திரு கருணாநிதி கவர்னரிடம் தனது மற்றும் தனது அமைச்சரவை பதவி விலகல் கடிதத்தை அளிக்கிறார். அதனை ஏற்று கவர்னர், மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை அவரை முதல்வராகவும் அவரது அமைச்சரவையும் தொடரட்டும் என சொல்கிறார்
இதற்கான கவர்னரின் கடிதத்தினை இந்த சுட்டியில் காண்க http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr13May11/pr130511_46.pdf
தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியான பின்பு தேர்தலில் வெற்றி பெற்ற அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான அதிமுக தனது சட்ட மன்ற கட்சித் தலைவராக ஜெ வை 15 மே 2011 அன்று தேர்வு செய்கிறது. அன்றே அவர் ஆட்சி அமைக்கும் உரிமையினை கவர்னரை சந்தித்து கோருகிறார். அவரை ஆட்சி அழைக்க கவர்னர் அழைக்கிறார். ஜெ. சீஃப் மினிஸ்டர் டெசிக்னேட் அல்லது சீஃப் மினிஸ்டர் எலெக்ட் ஆக அந்தஸ்து பெறுகிறார்.. கவனிக்க அவர் அந்த தருணத்தில் முதல்வர் இல்லை ( அப்போதும் முக தான் முதல்வர்) . அன்றே தன்னுடன் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளவர்கள் பட்டியலை இலாகா ஒதுக்கீடு உட்பட கவர்னரிடம் வழங்குகிறார். அதனை பரிந்துரையாக ஏற்று ( கவனமாக பார்க்கவும் பரிந்துரையாக) கவர்னர் ஒப்புதல் வழங்குகிறார்
கவர்னரின் ஒப்புதல் செய்தி வெளியீடு சுட்டி :http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr15May11/pr150511_274.pdf
இதில் என்ன என கேட்பவர்களுக்கு
மாநில அமைச்சரவையில் அமைச்சர் நியமனத்துக்கான வழி முறை குறித்து இந்திய அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது
ஷரத்து 164(1)

164. (1) The Chief Minister shall be appointed by the Governor and the other Ministers shall be appointed by the Governor on the advice of the Chief Minister, and the Ministers shall hold office during the pleasure of the Governor

ஆக அமைச்சர்கள் நியமனத்துக்கு கவர்னர் முதலமைச்சரின் பரிந்துரையினைத் தான் ஏற்க வேண்டும் ஆனால் சீஃப் மினிஸ்டர் டெசிக்னேட் அல்லது சீஃப் மினிஸ்டர் எலக்ட் பரிந்துரையினை ஏற்று இருக்கிறார்; அவர் பரிந்துரை ஏற்கும் போது முக தான் முதல்வர்; மிகச் சரியாக சொல்ல வேண்டுமெனில் இந்த விஷயத்தில் சட்டப்படி முதல்வர் அல்லாத ஒருவரிடம் பரிந்துரை பெற கவர்னருக்கு அதிகாரம் இல்லை
இதை எப்படி நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டுமெனில். முதல்வராக பதவி ஏற்க அழைத்து அதன் பின் ஜெ முதல்வராக பதவி ஏற்று அந்த கணமே அவரிடம் பரிந்துரை வாங்கி உடனே மற்ற அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்திர்க்க வேண்டும்

சின்ன சறுக்கல் தான் ஆனாலும் தவிர்த்து இருக்கலாம்

2 comments:

தமிழ் உதயம் said...

ஜெ முதல்வர் ஆவதில் அவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி இருக்காதா. அந்த மகிழ்ச்சில சட்ட நுணுக்கங்களை மறந்து இருக்கலாம்.

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - சின்ன சறுக்கல் தான் - இருப்பினும் கவனித்திருக்கலாம். அவசரத்தில் மறந்திருக்கலாம். மௌளியின் கண்களுக்குத் தப்பாது என அவர்களுக்குத் தெரியவில்லை.