
கனிமொழி என்ற எனது முந்தைய பதிவு பெற்றுத் தந்த உற்சாகம் அதன் தொடர்ச்சியாக இந்தப் பதிவு
கனிமொழி மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் அவர் மீது Prevention of Corruption Act Section 7 & 11 மற்றும் Indian Penal code Section 120 B கீழ் குற்றம் இழைத்தவர் எனும் அடிப்படையில் அவர் மீது குற்றம் சுமத்தப் பட்டுள்ளது
இந்த சட்டப் பிரிவுகளின் தன்மைகளைத் தெரிந்து கொள்வது நலம்;
என்னுடன் உரையாடியவர் பலருக்கு இந்த சங்கதிகளுக்கு ஏன் இவ்வளவு கால அவகாசம் உடனே பிடித்து உள்ளே தள்ள வேண்டியது தானே எனும் அளவில் அவசரம் இருப்பது தெரிந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றம் இழைக்கவில்லை எனக் கருதும் போது ஏன் முன் ஜாமீன் கோரணும் அதுவே அவருக்கே அவர் மீது நம்பிக்கையில்லை என்பதைக் காட்டுகிறதே என்ற கேள்வி என்னிடம் இணைய உரையாடலில் கேட்டார்கள். எனக்கு அந்த கேள்வி அறியாமையா அல்லது ஒருதலைப் பட்சமாக யோசிக்க மக்களை நிர்பந்தித்துள்ள ஊடகங்களின் கைவரிசை காரணமா என சிந்திக்க தூண்டியது. இரண்டும் தான் இருக்க வேண்டும்.
இப்போது அந்த சட்டப் பிரிவுகளை கவனிக்கலாம் இது சாரம் தான் புரிந்து கொள்ள வசதியாக எளிமையாக சொல்லிருக்கேன்
ப்ரிவென்ஷன் ஆஃப் கரப்ஷென் ஆக்ட் செக்சன் 7ன் சாரம்
பொது ஊழியர் (ப்ப்ளிக் சர்வன்ட்) அல்லது பொது ஊழியராக ஆக இருப்பவர் தனக்கோ அல்லது பிறர் சார்பாகவோ அரசு மற்றும் அரசு சார்பு துறையில் பணியினை செய்வதற்கோ அல்லது பணி செய்யாமல் இருப்பதற்கோ ஊதியம் அல்லது ஊதியம் சார்ந்த வருமானம் தவிர பிற எவ்விதமான வெகுமதியினையும் பெறுவது குற்றமாக கருதப்படும்
அதே ஆக்டின் செக்சன் 11ன் சாரம்
பொது ஊழியர் தான் சார்ந்துள்ள பணி தொடர்புடைய எவருடனும் வர்த்தகப் பறிமாற்றங்கள் செய்வது குற்றம்
இப்ப ஐபிசி செக்சன் 120பி
இது சதி செய்தல் அல்லது கூட்டுச் சதி செய்தல்
இந்த இரண்டு வகை குற்றச் சாட்டிலும் முன்னாள் அமைச்சர் இராசா நேரடியாக தொடர்புடையவராகிறார் ; காரணம் அவர் அந்த துறைக்கு அமைச்சராக இருந்ததால் இந்த குற்றச் சாட்டுகளில் கனிமொழியினை இராசவின் சார்பில் கலைஞர் தொலைக் காட்சி பெயரில் பணம் பெற்றார் எனக் குற்றம்
சாட்டப்பட்டுள்ளது
இப்போது கவனிக்க
தான் பங்குதாரராக இருக்கும் தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயரில் இவர் வாங்கிய பணம் இராசவின் சார்பில் பெறப்பட்ட முறையற்ற
வெகுமதிதான். அது கடனல்ல. வழக்கமாக கடன் வாங்கும் போது பெறப்படும் ஆவணங்கள் இல்லை என்பது சிபிஐ வாதம்
“சார்பில்” எனும் வாதத்தினை முன்வைக்க இவர் அவரை அடிக்கடி சந்தித்தார். பேசினார். அவர் அமைச்சராக இவர் எவருடனோ பேசினார் என பொதுவாக யூகத் தன்மை கொண்டு இருக்கிறதேயல்லாது. இந்திய குற்றவியல் நடைமுறைக்குத் தேவையான சந்தேகத்திற்கு இடமில்லாத நிரூபணமாக இல்லை
இந்தப் பதிவுக்கும் படத்துக்கும் நிறைய தொடர்பு இருக்கு. அந்த கயிறு இழுக்கும் வீரர்கள் எல்லோரும் சிபிஐ அதிகாரிகள். இந்த ஆண்டு சிபிஐ விளையாட்டுப் பந்தயத்தின் போது எடுக்கப்பட்ட படம்.. சுட்டி
5 comments:
அன்பின் மௌளி
பல சட்டப் பிரிவுகள் - அவற்றின் விளக்கம் - சி பி ஐ அதிகாரிகள் கயிறு இழுக்கும் படம் - எதிரில் யார் என நாமே புரிந்து கொள்ளலாம். அருமை அருமை - 14 வரை பொறுத்திருப்போம். நல்வாழ்த்துகள் மௌளி - நட்புடன் சீனா
கடைப்பக்கம் எட்டிப்பார்த்த காரணத்தால் உங்கள் பெயர் அறிமுகம்:)
கனிமொழி குறித்த இரண்டு இடுகைகளையும் படித்தேன்.சட்டநுணுக்கங்களோடு நீங்கள் பேசுவதால் அந்த துறை சார்ந்தவராக அல்லது தொடர்புடையவராக இருக்க வேண்டும்.
இதுவரையிலும் கனிமொழி கையெழுத்துடனான பணம் மாற்றம் குறித்த ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் ஊடகங்களில் கசியாத நிலையில் ஜெத்மலானியின் வாதம் வெல்லும் சாத்தியம் இருக்கிறதா?அல்லது பப்ளிக் பிராசிக்யூட்டர் லலித் வாதத்தின் படி சரத் கையெழுத்துப்போடுபவராக இருந்தாலும் யதார்த்த முகமாக நிறுவனத்தை நடத்துவது 80% பங்குதாரர்களே என்ற வாதம் எடுபடும
உங்கள் மேதாவிலாசதைக்க் காண்பிக்கும் முயற்சியாகத் தெரிகிறதே ஒழிய இதில் பொது நலன் சிறிதும் இல்லை.
குறிப்பிட்ட sections படி இவரது குற்றங்களை நிரூபிக்க முடியவில்லை என்றால், எந்த sections மூலமாக அதை நிரூபிக்க முடியும் என்று ஆராய்வதே நாட்டு நலம் நாடுவோரின் நல்லெண்ணமாக இருக்கும்.
"ஒருதலைப் பட்சமாக யோசிக்க மக்களை நிர்பந்தித்துள்ள ஊடகங்களின்" என்கிறீர்கள். ஊடங்கள் அந்த ஆளின் அமில நாக்குக்கு பயந்து முழுவதுமாக அவர் கட்சிப் பத்திரிக்கைகளை மிஞ்சும் அளவு இருந்ததால் தான் நான் தமிழ் ஊடங்கள் பக்கமே பல ஆண்டுகளாக செல்வதில்லை. நீங்கள் சொல்வது போல இப்போது அவர்கள் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்து இருந்தால் அது மிகவும் வரவேற்க தக்கதாகும்.
உலகப் புகழ் "விஞ்ஞான ரீதி ஊழல்" விற்பன்னரை எதிர் கொள்ள எந்த முயற்சியும் உகந்ததாகும்.
உங்கள் மேதாவிலாசதைக்க் காண்பிக்கும் முயற்சியாகத் தெரிகிறதே ஒழிய இதில் பொது நலன் சிறிதும் இல்லை.
குறிப்பிட்ட sections படி இவரது குற்றங்களை நிரூபிக்க முடியவில்லை என்றால், எந்த sections மூலமாக அதை நிரூபிக்க முடியும் என்று ஆராய்வதே நாட்டு நலம் நாடுவோரின் நல்லெண்ணமாக இருக்கும்.
"ஒருதலைப் பட்சமாக யோசிக்க மக்களை நிர்பந்தித்துள்ள ஊடகங்களின்" என்கிறீர்கள். ஊடங்கள் அந்த ஆளின் அமில நாக்குக்கு பயந்து முழுவதுமாக அவர் கட்சிப் பத்திரிக்கைகளை மிஞ்சும் அளவு இருந்ததால் தான் நான் தமிழ் ஊடங்கள் பக்கமே பல ஆண்டுகளாக செல்வதில்லை. நீங்கள் சொல்வது போல இப்போது அவர்கள் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்து இருந்தால் அது மிகவும் வரவேற்க தக்கதாகும்.
உலகப் புகழ் "விஞ்ஞான ரீதி ஊழல்" விற்பன்னரை எதிர் கொள்ள எந்த முயற்சியும் உகந்ததாகும்.
Ram
துக்ளக் கூட கிட்டத்தட்ட இதையேதான் எழுதி இருக்கிறார்கள், சிபிஐ யின் ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று. மே 13 க்கு பிறகு முடிவுகளைப்பொருத்து பல புதிய ஆதாரங்களை சிபிஐ நீதியின் முன் வைக்ககூடும், அல்லது அன்னா ஹசாரே போன்றவர்களின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் நீதிமன்றத்திற்கு துணிவை அதிகப்படுத்த கூடும். அல்லது தலைவர் பாணியில் ஆண்டவந்தான் காப்பாற்ற வேண்டும்
Post a Comment