Saturday, 28 May 2011

சமச்சீர் கல்வி

அதிக அறிமுகம் தேவையில்லை. அந்த அளவுக்கு இப்போது அதிகப் பிரபலமாகியிருக்கும் சங்கதி.

தமிழ்நாட்டில் ஸ்டேட் போர்ட், மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என நான்கு வழிகளில் பள்ளிக் கல்வி திட்டம் இயங்குவதால் பள்ளிக் கல்வியிலேயே முரண்பாடான நிலையினை சீர் செய்திடும் நோக்கமாக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வண்ணமாக இதனை ஆய்வு செய்து அறிக்கை அளித்திட பாரதி தாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழுவினை அமைத்தது. அரசாணை எண் 159 நாள் 08-செப்டம்பர் 2006. இந்த குழுவில்
மெட்ரிக்குலேஷன் பள்ளி, ஆங்கிலோ இந்தியன் பள்ளி, ஓரியண்ட்ல் பள்ளியினைச் சேர்ந்தவர்களும் இருந்தனர்

திரு முத்துக் குமரன் தலைமையிலான குழு தனது அறிக்கையினை அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையினை பரீலிக்க ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திரு எம்பி விஜய குமார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது அந்த குழுவில் இடம் பெற்ற கல்வியாளர்கள் கேரளா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா , குஜராத் மாநிலங்களில் பள்ளிக் கல்வித் திட்டம் செயல்படும் விதம் குறித்து
அறிந்து வந்து தமிழ்நாட்டில் மாநிலமெங்கும் பள்ளிக் கல்வி ஒரே பாடத்திட்டம் , பாட நூல்கள் , தேர்வு முறை அமைய வேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்தது

அதன் அடிப்படையில் பல்வேறு நிலைகளில் விவாதிக்கப்பட்டு சமச்சீர் கல்வித் திட்டமும் அதனை நிர்வகிக்க நிர்வாக அமைப்பும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அதன் பின் சட்ட மன்றத்தில் சட்ட முன் வடிவாக விவாதத்திற்கு அனுமதிக்கப்பட்டு அது மன்றத்தில் விவாதிக்கப்பட்டு பின்னர் Tamil Nadu Uniform System of School Education Act 2010 எனும் சட்டம் பிறந்தது. கவனிக்க சட்டம் பிறந்தது

இந்த சட்டம் 30 நவம்பர் 2009 முதல் முன் தேதியிட்டு அமுலுக்கு வர சட்ட மன்றம் அனுமதி வழங்கி முறையாக ஆளுநரின் அனுமதியும் பெற்று சட்டமானது

இதற்கான அரசாணை பள்ளிக் கல்வித் துறை 01‍ பிரப்ரவரி 2010 அன்று பிறப்பிக்கப்பட்டது இந்த சட்டத்தினை எதிர்த்து நீதி மன்ற வழக்கு தொடரப்பட்டது

உயர் நீதி மன்றத்தில் இந்த சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு இடையூறு அளிப்பதாக இருப்பதால் இந்த சட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது

மேலும் அரசு இந்த திட்டத்தின் வழி செயல் படுத்த முனையும் சமூக நீதி வெறும் மாயை காரணம் சிபிஎஸ்சி ஐசிஎஸ்ஸி என இன்னும் இரண்டு பாடத் திட்டங்கள் இந்தியாவில் இருக்கிறது அவை தமிழகத்திலும் செயல்படுகின்றன எனவும் வாதிடப்பட்டது

அரசு உத்தேசிக்கும் ஒரே பாடத்திட்டம் தரமற்றதாக இருக்கும் எனவும் வாதிடப்பட்டது. அரசின் பாடத்திட்டம் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தினை விட மிகவும் தரம் தாழ்ந்ததாக இருக்கும் என வாதிடப்பட்டது

இந்த சட்டத்தின் சில ஷரத்துகள் இந்திய குடியரசு தலைவரின் அனுமதி பெறத்தக்கவை ஆனால் அரசு ஆளுநரின் அனுமதி மட்டுமே பெற்றுள்ளது என வாதிடப்பட்டது

இந்த வாதங்களுக்கு அரசு தரப்பில் மிகச் சரியானதொரு கோணத்தில் உரிய சான்றுகளுடன் மறுப்பு தெரிவிக்கப்பட்டு நீதிமன்றம் அரசின் திட்டம் சரியானது தான் என மிக தெளிவான விவாதங்களுடன் விளக்கங்களுடன் தீர்ப்பளித்தது. இந்த விளக்கங்களை எல்லோரும் அவசியம் படிக்க வேண்டும். தீர்ப்பின் அதிகார பூர்வ நகல் உயர்நீதிமன்ற வலையில் இலவசமாகவே டௌன் லோட் செய்யலாம்

பொதுவில் சமச்சீர் கொலை என ஜல்லி அடிப்பதை விட இப்படி படித்து விட்டு வந்தால் ரொம்ப நல்லது

World Education Indicators என மிகவும் விபரமான ஆய்வுக் குறிப்புகள் தகுந்த புள்ளி விபரங்களுடன் யுனெஸ்கோவின் வலைத் தளத்தில் இலவசமாகவே பிடிஎஃப் கோப்பாக கிடைக்கிறது

அதிலிருந்து ஓரே ஓர் அம்சத்தினை குறிப்பிட வேண்டும். அந்த அந்த் வயதில் எவ்வளவு புரியுமோ அதைத் தான் பாடத்திட்டமாக வைக்க வேண்டும். அதை விடுத்து வெளியே உலகத்தில் விஞ்ஞானம் வளர்கிறது, டெக்னாலஜி வளர்கிறது என்பதற்காக அதனை முதல் வகுப்பு பயிலும் மாணவனுக்கே சொல்லிக் கொடுக்க முயல்வது தர வளர்ச்சி ஆகாது .. தற்கொலைக்கு சமம்

இப்போது ஜெ ஆட்சியில் நடந்துள்ள அவசரத்தினைக் கவனிக்கலாம்

1. முந்தைய அரசு அறிவித்து நடைமுறைப்படுத்திய கல்வித் திட்டத்திற்கு செய்துள்ள ஆய்வுகள் , அறிக்கைகள், விவாதங்கள் , புள்ளி விபரங்களை பதவி ஏற்ற 10 நாள் அவகாசத்திற்குள் அவை எல்லாம் தவறானது என இத்தனை வேகத்துடன் முடிவு செய்யும் அபத்தமான லாஜிக்; இதனை தவறு என அறிந்து கொள்ள புதிய அரசு என்ன ஆராய்ச்சி செய்தது அதுவும் 10 நாளுக்குள்

2. நிபுணர்களின் குழு அமைக்கப்பட்டு அவர்களின் அறிக்கை பெற்று சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதல் பெற்று அது பின்னர் நீதி மன்றத்தின் வழக்கு விசாரணைக்கும் உள்ளாகி அங்கும் தவறில்லை என தீர்ப்பான ஒரு சட்டத்தினை ஒரு Executive Order மூலம் மாற்றுவது எவ்வளவு தவறானது என்பதை தெரிந்தே செய்யும் ஏதேச்சிகாரம். சட்ட மன்றத்தில் சட்டமான ஒரு சட்டம் மறுவடிவம் பெற குறைந்த் பட்சம் ஆளுநரின் ordinance தேவை . இந்த அடிப்படை நன்றாகத் தெரிந்திருந்தும் அதனைக் கடைபிடிக்காத
மமதை

3. கருணாநிதி ஆட்சிக் காலத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்திற்கான அறிக்கைகள் தந்தவர்கள் இன்னமும் இருக்கின்றார்களே. அவர்களை அழைத்து என்ன அடிப்படையில் இப்படி கருத்துரைத்து அறிக்கைகள் அளித்தீர்கள் என கேட்டார்களா என்றால் அதுவும் இல்லை.

இவர்களாக புதிய ஆய்வுகள் மேற்கொண்டார்களா என்றால் அதுவும் இல்லை

எங்களிடம் தான் போதிய பெரும்பான்மை இருக்கிறதே. அது போதாதா

6 comments:

manjoorraja said...

Thanks for the detailed description

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - உண்மை நிலையினை எடுத்துரைத்தமைக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

சூப்பர்!ஒரு சிறிய விளக்கம்!10 நாட்களுக்குள் என்பது சரியல்ல.ஆளும் கட்சியின் எல்லா செயல்களையும் எதிர்கட்சியும் மக்களும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.சமசீர் கல்வி பற்றி ஒன்றுமே தெரியாத நிலையில்-இந்த பத்து நாட்களில்தான் தெரிந்து கொள்ளவேண்டும்-என்ற இடம் மட்டும்தான் தவறு.அவர் முறையோடு கைது செய்தார்.இவர் அவசரப்பட்டு ஆவேசத்துடன் செயல்பட்டார். என்ற அதே நிலைப்பாடு தான் தெரிகிறது,நடுநிளையலர்களுக்கு.தொடரட்டும் உங்கள் பணி, வாழ்த்துக்கள்.

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

தமிழன்,

கமெண்டுக்கு நன்றி

10 நாட்களுக்குள் என்ன செய்து இதனை தப்பு என கண்டு பிடித்தார்க்ள் என கேள்வியும் கேட்டிருக்கேன்

VSK said...

நடுநிலையாக இல்லாமல், திமுக அபிமானத்துடன் எழுதப்பட்ட இடுகையாகத் தெரிகிறது.

திட்டம் ரத்து செய்யப்படவில்லை. மறு மற்றும் மேல் ஆய்வுக்காக தாற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அவ்வளவே.
பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், இதனைச் செய்ய ஒரு எக்ஸிக்யூடிவ் ஆர்டர் போதும் எனத் தங்களுக்கும் தெரியும். இருந்தும் இப்படிச் சொல்லியிருக்கிறீர்கள்.

10 நாட்களுக்குள் அல்ல. இத்திட்டம் வந்த நேரத்திலிருந்தே, இது அரைகுறையானது என அதிமுக சொல்லியிருந்தது. அதனை இப்போது அவசரமாகச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால் இந்த அவசரச் சட்டம்.

ஒருவேளை இது அப்படியே தொடர விட்டிருந்தால், ஆஹா, பார்! ஒரு வருடம் எல்லாரையும் படிக்க அனுமதி கொடுத்துவிட்டு, இப்போது பிடுங்கினால், பிள்ளைகள் என்ன செய்வார்கள் எனும் ஓலம் கிளம்பியிருக்கும்!

இதுதான் முதலாம் ஆண்டு! இப்போது நிறுத்தியதே சரியான முடிவு!

Jeba Joselin J said...

Hi Friend,

Please refer an article in the last week Junior Vikatan, "Why Kamaraj is called King Maker?"

Samchcheer kalvi Answer: He was the reason for making 3 congress chief ministers in Tamil Nadu.

Is it the standard ?

I dont know who is the head of history expert committee.