Tuesday 17 May 2011

புரட்சித் தலைவி காணவில்லை


தலைப்பினைக் கவனித்து விட்டு யாரும் பதற வேண்டாம்.
அடை மொழிக்கும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு
இராஜாஜி அவர்களை மூதறிஞர் என்றும் அவரின் இனிய நண்பர் ஈ.வெ.ரா அவர்களைப் பெரியார் என்றும் அவர் வழி வந்த அண்ணாவை அறிஞர் என்றும், அவரைத் தொடர்ந்த கருணாநிதியைக் கலைஞர் என்றும் அவர் நண்பர் இராமசந்திரனை தொடக்க காலத்தில் புரட்சி நடிகர் என்றும் பின்னர் புரட்சித் தலைவர் என்றும், அவர் அறிமுகம் செய்த ஜெயலலிதாவை புரட்சித் தலைவி என்றும் அடை மொழி கொடுத்து மகிழ்ந்திருக்கிறது தமிழ்நாடு.
முன்பு முதல்வராக இருந்த சமயம் ஜெ புரட்சித் தலைவி எனும் அடை மொழியாலேயே விளிக்கப்பட்டார் ஏன் துதிக்கப்பட்டார் என்றே சொல்லலாம். சட்ட மன்றத்தில் ஒவ்வொரு துறை அமைச்சரும் துறை தொடர்பான செய்திகளையோ விவாதத்தையோ அவையில் தொடங்குவதற்கு முன்பு புரட்சித் தலைவி பெயரில் சற்றேறக் குறைய ஒரு காப்பு செய்யுள் படித்து விட்டு தான் தொடங்கினர்.
ஒன்றை மறக்காமல் குறிப்பிட வேண்டும் ; இந்த துதி கலாச்சாரத்தினை தொடங்கிய பெருமை கருணாநிதியினைச் சாரும். அவரின் பழைய காலத்தில் தமிழ் வேள்,, எக்ஸ்சட்ரா... அவர் சமீபத்தில் முதல்வராக இருந்த போது “காப்பு செய்யுள் “ கலாச்சாரத்தின் எல்லையினை அவரது உடன்பிறப்புகள் தொட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.. அடை மொழிக்கு வள்ளுவர் தொடங்கி அரிஸ்டாட்டில் வரை இழுத்து வந்தார்கள்
இதற்கு முந்தைய ஜெ ஆட்சி காலத்தில் எங்கு நோக்கினும் “புரட்சித் தலைவி” அரசு விழா, அழைப்பிதழ், தோரணங்கள் என எங்கும் சர்வ வியாபியாக புரட்சித் தலைவி
ஆனால் இந்த புதிய ஆட்சி காலத்தில் அடை மொழி காணப்படவில்ல . புரட்சித் தலைவி காணவில்லை. அமைச்சர்கள் முதல்வர் அம்மா என்பதாய் மட்டுமே உரைக்கின்றனர். ஜெயா தொலைக் காட்சியும் செல்வி . ஜெயலலிதா என்பதாக மட்டுமே விளிக்கின்றனர்
புரட்சித் தலைவி காணவில்லை என்பது நன்மையே அவருக்கும் அவரைச் சார்ந்தவருக்கும்

5 comments:

Anonymous said...

தேடல் தொடரட்டும்!

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - எப்படி இவற்றை எல்லாம் கவனிக்கிறீர்கள் - உண்மை இப்பொழுதுதான் எனக்கே புரிகிறது

Anonymous said...

.................ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........................
கலக்குங்க பாஸ்.........

VSK said...

எல்லாம் வரும் கொஞ்சங்கொஞ்சமா! இப்ப அம்மா தலைமைச் செயலக மாற்றத்தில் படு பிஸி! அதான்!
இப்ப நீங்க சொல்லிட்டீங்கல்ல. இது உடனே அம்மாவின்... சேச்சே... புரட்சித்தலைவியின் பார்வைக்கு உடனே கொண்டு செல்லப்பட்டு, அதற்கான அரசாணை உடனே வரலாம்!

Prathap R said...

It seems that she is no more a Dictator J. Studied that she ordered not to stop the traffic for her. It seems she learnt something from previous experience. Let's see how she rules.