Thursday, 12 May 2011

IAS


செய்திகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் முண்ணனி எனச் செய்தி வந்த உடன் இந்தப் பதிவினைப் பதிகிறேன்.

பணி என்பது பாரம் அல்ல; மாறாக அது துலாபாரம் போன்றது. ஒவ்வொரு கோப்பிலும் ஒரு ஏழையின் வாழ்க்கை அடங்கி இருக்கிறது. கோப்பில் ஒரு தாயின் கண்ணீரோ, விதவையின் வேதனையோ அடங்கி இருப்பதால் அது கனக்க்கிறது; இதை மனதில் வைத்துக் கொண்டு துணிச்சலுடன் நேர்மையுடனும் முடிவுகள் எடுக்கப்படுகின்ற ஒரு பணிக்குத் தன்னை முற்றிலுமாக அர்ப்பணிக்கத் துணிந்தவர்கள் மட்டுமே இந்த தேர்வை எழுதலாம். ஒரு மாநிலத்தின் தலைவிதியைக் கூட மாற்றுகின்ற மந்திரக் கோல் நம் கையில் தரப்படப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு இருக்கிற போது அதற்கு முற்றிலுமாக தகுதியுடைவரகளாக நாம் இருக்க ஆத்ம பரிசோதனை தேவைப்படுகிறது.

இந்த வரிகள் திரு வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களுடையது. அவரது ஐ.ஏ.எஸ் தேர்வும் அணுகுமுறையும் எனும் புத்தகத்தில் அணுகுமுறைகளைச் சொல்லி விட்டு இந்த வரிகளை சொல்லியிருப்பார்.

இந்த ஆண்டு தேர்வு பெற்றுள்ள வெற்றியாளர்களுக்கு இதையே என் வாழ்த்தாக சொல்வதில் மிக்க சந்தோஷம்

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி

நல்லதொரு வாழ்த்துகள் - இறையன்பின் அறிவுரையோடு. வாழ்க வளமுடன் - நேரமிருப்பின் பார்க்க http://cheenakay.blogspot.com/2011/05/blog-post.html

நட்புடன் சீனா