Sunday, 29 May 2011

கதை சொல்லி

அலுவலகத்தில் என் இருக்கைக்கு எதிரே சுவற்றில் ஒரு பெரிய சைஸ் இந்தியன் பொலிட்டிக்கல் மேப் தொங்கிக் கொண்டிருக்கும். நான் கணிணித் திரையில் இருந்து கண் விலக்கி எதிரே நோக்கும் போதெல்லாம் என்னுடன் மானசீகமாக உரையாடும். அதில் இருக்கும் மாநிலப் பரப்புகளின் மீது என் கண்கள் பயணம் செய்யும் போதெல்லாம் அந்தந்த மாநிலத்தில் யாருடனெல்லாம் உரையாடியிருக்கின்றேன் என அசை போடுவேன்.

என் தொழில் ரீதியான உரையாடலின் தொடர்ச்சியாக ,'தமிழ்நாடு என்றதும் உங்களுக்கு என்ன நினைக்கத் தோன்றும்' எனும் கேள்விக்கு கிடைத்த பதிலில் அதிகம் இடம் பெற்றது எம்.ஜி.ஆர், ஸ்ரீதேவி, ரஜினி காந்த், கமல்ஹாசன், இளையராஜா எனும் திரை அடையாளங்கள், ஜெ, கருணாநிதி எனும் அரசியல் பிரமுகர்கள் என்பது போக எப்போதாவது அபூர்வமாக பாரதி என்ற பதில் கூடக் கிடைத்திருக்கிறது.

சென்னையின் புவியியல் பரப்புகளை நபர்களைக் கொண்டு அடையாளப்படுத்திக் கொள்ளும் தனது வழக்கத்தினை எழுத்தாளர் எஸ்.ரா தனது வாசகர் பர்வத்தில் சொல்லியிருப்பார்


பொதுவாக ஒரு நாட்டின் அட்லஸை கவனித்தீர்கள் என்றால் அவை மாநில எல்லை, பருவ நிலை, நதிகள், மலைகள், தொழில், மண் வளம் என்பதாய் வகைப்பத்தப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கும் இவற்றில் மாநிலங்களின் கலாச்சார அடையாளம் தெரியவருவதில்லை

ஏகே இராமானுஜன் தொகுத்த Folk Tales From India எனும் பெங்குவின் பதிப்பகம் பதிப்பித்த புத்தகம் இப்படியான அடையாளம நல்கும் ஒரு பொக்கிஷம்.

தமிழ், கொண்டி, பெங்காலி, பஞ்சாபி, ஹிந்தி, மால்வி, ராஜஸ்தானி, ஒரிய ,கன்னடம், தெலுங்கு, காஷ்மீரி,சண்டாலி, உருது, அஸ்ஸாமி, குஜராத்தி, துளு, தித்யாதி, மலையாளம், மராத்தி,கும்மோனி, சிந்தி எனும் பல்வேறு மொழிகளில் விளங்கும் நாட்டுப் புறக் கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தந்திருக்கும் தொகுப்பு

சமீபத்தில் வாசித்த மிகவும் பயனுள்ள புத்தகம் எனச் சொல்வேன். கதைகளை தொகுத்திருக்கும் நேர்த்தியினைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்

இந்திய நாகரீகத்தின் பிரதிபலிப்பு அச்சில் வந்து பிரபலமான புத்தகங்களினால் மட்டுமல்ல வாய்மொழியாக சொல்லப்படும் நாட்டுப் புறக் கதைகளின் மூலமாகவும் கிடைக்கும்

இந்த தொகுப்பு ஒருவிதமான பாலம் அமைக்கும் பணி. ஒவ்வொரு மொழியினைச் சேர்ந்தவரும் இதைப்படிக்கும் போது பிற மொழிகளின் நாட்டுப்புற வழக்கில் விளங்கும் இயல்பை புரிந்து கொள்ள சான்ஸ் கிடைக்கிறது.

சில கதைகள் எல்லா மொழியிலும் சொல்லப்படுவதுண்டு. எந்த மொழியில் தோன்றி எந்த மொழிக்கு வாக்க்ப்பட்டு ( வார்க்கப்பட்டு ?) பின்னர் எல்லா மொழிக்கும் பரவியது எனத் தெரியவில்லை

அடுத்த முறை அஸ்ஸாமில் இருக்கும் ஒருவரிடம் பேசும் போது உங்கள் வட்டாரக் கதைகள் சில படித்தேன் என கதை சுருக்கம் சொல்லும் போது, எனக்கு காணக் கிடைக்காத மறு முனைப் புன்னகை, கதை சொல்லி இராமானுஜம் பெற்ற வெற்றி

3 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி

அருமை அருமை - மற்ற மாநிலத்தாரிடம் பேசும் போது அவர்கள் வட்டாரக் கதை ஒன்றினைச் சொல்லி, பேசும் போது அவர்கள் நிச்சயம் மகிழ்வார்கள். நல்ல செயல். நன்று. நல்வாழ்த்துகள் = நட்புடன் சீனா

(Mis)Chief Editor said...

அருமையான பதிவு...புத்தகப் பிரியனான எனக்குப் பிடித்த பாவித்தும் கூட...நம் குழந்தைகளுக்கு பரிசாகவும், கலாச்சாரத்தைப் பதிய வைக்கவும் இந்தப் புத்தகத்தால் முடியும் எனுபோது மகிழ்ச்சியாய் இருக்கிறது...வாழ்த்துக்கள் சந்திரமௌலி!

(Mis)Chief Editor said...

அருமையான பதிவு...புத்தகப் பிரியனான எனக்குப் பிடித்த பாவித்தும் கூட...நம் குழந்தைகளுக்கு பரிசாகவும், கலாச்சாரத்தைப் பதிய வைக்கவும் இந்தப் புத்தகத்தால் முடியும் எனுபோது மகிழ்ச்சியாய் இருக்கிறது...வாழ்த்துக்கள் சந்திரமௌலி!